புதுடில்லி, மார்ச் 11 அரியாணா ஹிசார் தொகுதி பாஜக எம்.பி. பிரிஜேந்திர சிங் பாஜக.,வில் இருந்து விலகி நேற்று (10.3.2024) காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
மக்களவை தேர்தலில் போட் டியிடும் வேட்பாளர்களின் முதல் பட்டியலை பாஜக சமீபத்தில் வெளியிட்டது. இதில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள்
34 பேர், மக்களவை தலைவர் ஓம் பிர்லா உட்பட 195 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. சிலருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்நிலையில், ஹரி யாணா ஹிசார் தொகுதி பாஜக எம்.பி. பிரிஜேந்திர சிங் நேற்று (10.3.2024) தனது கட்சி உறுப்பினர் பதவியை விட்டு விலகி காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜூன கார்கேவை டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந் தித்து காங்கிரஸில் இணைந்தார். இவரது தந்தை சவுத்ரி பிரேந்தர் சிங் கடந்த 2014ஆ-ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்.
அய்ஏஎஸ் அதிகாரியாக இருந்த இவரது மகன் பிரிஜேந்திர சிங் கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் ஹிசார் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இந்நிலையில் இவர் பாஜக.,வில் இருந்த நேற்று விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதுகுறித்து பிரிஜேந்திர சிங் எக்ஸ் தளத்தில் கூறியிருப்ப தாவது:நெருக்கடியான அரசியல் காரணங்களுக்காக நான் பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகிறேன். எனக்கு ஹிசார் தொகுதி எம்.பி.யாக பணியாற்ற வாய்ப்பளித்த பாஜக தலைவர்களுக்கு நன்றி. எம்.பி. பதவியிலிருந்தும் நான் விலகியுள் ளேன். இந்த வாய்ப்பளித்த ஹிசார் தொகுதி மக்களுக்கு நன்றி.பொது சேவையிலும், அரசியலிலும் எனது தீர்மானம் தொடரும்.
அரசியல் மற்றும் கொள்கை வேறுபாடுகள் காரணமாக நான் பாஜகவை விட்டு விலகி காங் கிரஸில் இணைந்துள்ளேன். விவ சாயிகள் போராட்டம், அக்னி வீரர்கள் திட்டம், மல்யுத்த வீரர்களின் போராட்டம் உட்பட பல விஷயங்களில் எனக்கு உடன் பாடு இல்லை.காங்கிரஸ் குடும் பத்தில் இணைவது எனக்கு மகிழ்ச்சி.
இவ்வாறு பிரிஜேந்திர சிங் கூறியுள்ளார்.
டில்லியில் உள்ள கார்கே இல்லத்தில் பிரிஜேந்திர சிங் காங்கிரஸ் கட்சியில் இணைந்த போது, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் அஜய் மக்கான், முகுல் வாஸ்னிக், தீபக் பபாரியா ஆகியோர் உடனிருந்தனர். வரும் மக்களவை தொகுதியில் ஹரியா ணாவின் ஹிசார் தொகுதியில் இருந்து இவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட லாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment