பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வழிகாட்டுதல் நிகழ்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 23, 2024

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வழிகாட்டுதல் நிகழ்ச்சி

featured image

“அலைப்பேசி – அதீத பயன்பாடும் மனநல பாதிப்பும் – மீளும் வழிமுறைகள்”

வல்லம், மார்ச்23- பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) “அலைப்பேசி – அதீத பயன்பாடும் மனநல பாதிப்பும் –_ மீளும் வழிமுறைகள்” எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாணவி எஸ்.இரா ஜலெட்சுமி (இணைச்செயலாளர், மாண வர் மன்றம்) வரவேற்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து பேராசிரியர் எஸ்.கோமதி (துணைஇயக்குநர், மாணவர் நலப்பிரிவு) தொடக்கவுரை யாற்றினார்.
அவர்கள் உரையாற்றும் போது மாண வர்களுக்கு இந்நிகழ்ச்சியின் முக்கியத்து வத்தை எடுத்துரைத்தார். பல்கலைக்கழகத் தின் பேராசிரியர் பி.விஜயலெட்சுமி (முதன் மையர், வாழ்வியல் மேலாண்மை மற்றும் அறிவியல் துறை) வாழ்த்துரை வழங்கினார். மேலும் அவர் மருத்துவர் கே.சர்மிளா (திரைக்கலைஞர், சமூக ஆர்வலர் மற்றும் யூ ட்யூபர்) அவர்களை வாழ்த்தி உரையாற் றினார்.
மருத்துவர் கே.சர்மிளா தலைமை யுரையாற்றும் போது அலைப்பேசியினை எப்படி ஆக்கப் பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்றும், அதில் உள்ள நுட்பங்களையும் அறிவுறுத் தினார்.

“இன்றைய மாணவச் செல்வங்கள் 6 மணி நேரத்திற்கு மேலாக அலைப்பேசியில் தங்க ளது பொழுதினை செலவழிக்கிறார்கள் என்றும், சமூக ஊடகங்களில் மாலையில் தான் அலைப்பேசியின் பயன்பாடு அதிக இளைஞர்கள் பயன்டுத்துகிறார்கள். கல்வி யறிவு, எழுத்தறிவு காலத்திற்கு தகுந்தாற் போல் நமது பயன்பாட்டை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். மதுப் பழக் கம், போதைப் பழக்கம் போல, இப்பொழுது தேவையற்ற அலைப்பேசி செயலிகளால் மாணவர்களுக்கு கவனிக்கும் திறன் மற்றும் சிந்திக்கும் திறன் சீரழிந்து கொண்டிருக்கிறது. மேலும் மற்ற போதைப் பழக்கங்களுக்கு உள்ள மருத்துவ சிகிச்சை போல அலைப் பேசி மோகத்திற்கு சிகிச்சை இல்லை என்று மாணவர்களுக்கு எச்சரிக்கை ஊட்டினார். அதுபோல் அலைப்பேசியை பயன்படுத்து வர்களுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் கிடையாது.
அலைப்பேசியை நாம் எப்படி பயன்ப டுத்த வேண்டும் என்பதற்கு, எந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும். ஏந்த மாதிரியான சிந்தனைகள் வந்துள்ளது என்பதை நாம் உடனே தெரிந்துகொள்கிறோம்.

நாம் அலைப்பேசி பயன்பாடுகளை நல்ல வழிகளுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தனிநபர் தங்களுடைய அலைப்பேசியை தமது சுயக்கட்டுப்பாட்டில் பயன்படுத்த வேண்டும் என்று எடுத்துக் கூறினார்.
மேலும், நேரம் பொன் போன்றது, காலம் உயிர் போன்றது. வாய்ப்புகள் வந்துக் கொண்டே இருக்கும், காலத்தை எவன் தன் வசம் வைத்துள்ளானோ அவன்தான் வெற்றி பெறுகிறான். முடியாது என்று எதுவுமே இல்லை. நீ யார் என்று அங்கீகரித் துக்கொள் -_ உன் உழைப்புதான் உனக்கு மூலதனம்” என்று அறிவுத்தினார்.

மேலும் “தந்தை பெரியார் மற்றும் அம் பேத்கர் போன்றவர்கள் தான் சமூகமாற்றத் திற்கான பெரிய புரட்சிகளை மனித குலத்திற்கு மீட்டுக்கொடுத்தனர். மேலும் சிந்திப்பதை நாம் எப்போது மறந்துவிடுகி றோமோ அப்போதே நம்முறைடய உயிரும் பிரிந்து விடுகிறது. சிந்தனையும் தேடுதலுமே தான் ஒரு முக்கிமான இடத்தை பெறுகிறது. இதுவே வெற்றிக்கு காரணமாக அமை கின்றது” என மாணவர்களுக்கு ஊக்க மளித்தார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.வெ.இராமச்சந்திரன் உரையாற்றும் போது, இருபது வருடங்களுக்கு முன் இதுபோன்ற சமுகவலை தளங்கள் கிடை யாது. இன்று உடனுக்கு உடன் நாம் உலகில் நடக்கும் தவறுகளை உணருகி றோம். மேலும் சிறப்பு விருந்தினர் அவர் கள் நல்ல கருத்துகளை எடுத்துரைத்தார். இது காலத்தின் கட்டாயமாகும். ஆகை யால் மாணவர்கள் அலைப் பேசியை நல்லமுறையில் பயன்படுத்தி நல்வழியில் பயணிக்குமாறு கேட்டுக்கொண் டார்.
மாணவர் எஸ்.மணிஷ்குமார் (தலை வர், மாணவர் நலமன்றம்) நன்றியுரை யாற்றினார்.

No comments:

Post a Comment