தமிழ்நாட்டில் ஆறு நாள்களில் அரசுப் பள்ளிகளில் 82 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 11, 2024

தமிழ்நாட்டில் ஆறு நாள்களில் அரசுப் பள்ளிகளில் 82 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை

சென்னை, மார்ச் 11- அரசு பள்ளிகளில் 2024-2025ஆ-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. பள்ளிக்கல்வித்துறை மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தி வருகிறது.

வழக்கமாக மாணவர் சேர்க்கை ஏப்ரல், மே மாதங்களில் நடை பெறும். ஆனால் இந்த ஆண்டு முன் கூட்டியே நடத்தப்படுகிறது.
அரசு பள்ளிகளில் மாணவர்க ளுக்கு வழங்கப்படும் கல்வி உபகர ணங்கள், ஸ்மார்ட் வகுப்பறை, காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து ஒவ் வொரு பகுதியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத் தப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து மாவட்டங் களிலும் பள்ளி தலைமை ஆசிரியர் கள், ஆசிரியர்கள் மாணவர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு உள் ளனர்.
9.3.2024 அன்று வரை 80 ஆயி ரம் மாணவ, -மாணவிகள் அரசு பள் ளிகளில் சேர்ந்து உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,411 மாணவர்கள் சேர்க்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது. தொடக்கப் பள்ளியில் 4,959 பேரும் மேல் நிலைப் பள்ளியில் 5,452 பேரும் சேர்ந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் 3,890 பேரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7,770 பேரும் சேர்ந்து அடுத்தடுத்து முதலிடத்தில் உள்ளனர். 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை உள்ள தொடக் கப் பள்ளிகளில் மட்டும் 46,586 பேரும் நடுநிலைப் பள்ளிகளில் 21,853 பேரும் சேர்ந்துள்ளனர்.

உயர்நிலைப் பள்ளிகளில் 6,287 பேரும், மேல்நிலைப் பள்ளிகளில் 5,350 பேரும் அரசு பள்ளிகளில் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மாணவர் சேர்க்கைப் பணியை கல்வித்துறை தீவிரப்படுத்தி வருகிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி இதற்கான அனைத்து பணிக ளையும் வேகப்படுத்தி உள்ளார்.

No comments:

Post a Comment