நேரடி பயனாளர் பரிவர்த்தனை திட்டம் 6ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே வங்கிக்கணக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 5, 2024

நேரடி பயனாளர் பரிவர்த்தனை திட்டம் 6ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே வங்கிக்கணக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

featured image

சென்னை, மார்ச் 5– 2024-2025ஆ-ம் கல்வியாண்டில் 6ஆ-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அவர்க ளது பள்ளியிலேயே புதியதாக வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு, நால்வகைச் சான்றிதழ்கள் வழங் கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்து உள் ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய முயற்சியால் தமிழ்நாட்டி லுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் பொருட்டு பல்வேறு முன்னெடுப்புகள் எடுக் கப்பட்டு வருகின்றன.

மாணவர்களின் கற்றலில் எவ் விதத் தொய்வும் ஏற்படாவண்ணம் அவர்களுக்கான உதவித்தொகை கள் மற்றும் ஊக்கத்தொகைகள் அனைத்தும் தங்குதடையின்றி மாணவர்களைச் சென்றடையும் வண்ணம் “நேரடி பயனாளர் பரிவரித்தனை” (DBT) முறை நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க இப்பணியினை எளிமைப்படுத்தும் விதத்தில் வரும் கல்வியாண்டில் (2024-2025) ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் பள்ளி மூலமாகவே வங்கிக்கணக்குகள் தொடங்கிடும் வசதி தற்போது உருவாக்கப்பட்டுள் ளது.
அத்தருணத்திலேயே ஆதார் புதுப்பித்தல் செய்யப்பட்டு ஆதார் பதிவினை வங்கிக்கணக்குடன் இணைக்கும் பணிகளும் மேற் கொள்ளப்படும். இதன்வாயிலாக பெற்றோர்கள் மற்றும் மாணவர் களின் சிரமம் பெருமளவில் குறைக் கப்படும்.

மேலும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் உதவித்தொகையி னைப் பெறுவதற்கு விண்ணப்பிக் கும் போதும், பள்ளிப்படிப்பை முடித்து உயர்கல்வி பயில்வதற்கு விண் ணப்பிக்கும் தேர்விலும், வேலைவாய்ப் பிற்கு விண்ணப்பிக் கும் தருணத்திலும் ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றி தழ். இருப்பிடச் சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரியாக இருப்பின் அதற் குரிய சான்றிதழ் என நால்வகைச் சான்றிதழ்கள் அவசியமாகின்றன.

இந்நால்வகைச் சான்றிதழ் களைப் பெறுவதற்கு தற்போது அரசு இ_-சேவை மய்யங்கள் வாயி லாக விண்ணப்பித்து தேவையான சான்றிதழ்களைப் பெற்றுவருகின் றனர்.
முதலமைச்சரின் வழிகாட்டு தலின்படி பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் இதற்கான சிரமத்தைக் குறைத்திடும் வகையில், மாணவர்கள் படிக்கும் அந்தந்தப் பள்ளிகளிலேயே வரும் கல்வியாண் டில் (2024-2025) ஆறாம் வகுப்பில் சேரும்போதே, தேவையான ஆவ ணங்களை பள்ளித் தலைமையாசிரி யரிடம் சமர்ப்பிக்கும்போது அதன் விவரங்கள் கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS) தளத்தில் உள்ளீடு செய்யப்பட்டு வருவாய்த் துறையினருக்கு அனுப்பி வைக்கப் படும்.

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் பட்டு (EMIS) தளத்தின் வாயிலாகவே பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உரிய மாணவர்கள் வசம் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த நல்வாய்ப் பினை அனைத்து மாணவர்களும் பயன்படுத் திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கி றேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

No comments:

Post a Comment