உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
மதுரை, மார்ச். 3- கீழடியில் இரண்டாம் கட்ட அகழாய் வில் கண்டெடுக்கப்பட்ட 5,765 பொருட்கள் விரைவில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக் கப்படும் என உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள் ளது.
சென்னையைச் சேர்ந்த வழக் குரைஞர் கனிமொழி மதி, உயர் நீதிமன்ற கிளையில் 2016இ-ல் தாக்கல் செய்த மனுவில், “சிவ கங்கை மாவட்டம் கீழடியில் 2013 முதல் 2016 வரை ஒன்றிய அரசு சார்பில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராம கிருஷ்ணன் அகழாய்வுப் பணியை மேற்கொண்டார்.
இந்த அகழாய்வில் 5000க்கும் மேற்பட்ட பழைமையான பொருட்கள் கிடைத்தன.
இந்நிலையில் அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற் றம் செய்யப்பட்டு, சிறீராமன் கீழடி தொல்லியல் பொறுப் பாளராக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் நடந்த 3ஆம் கட்ட அகழாய்வில் குறிப் பிடும்படியான பொருட்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
எனவே, கீழடி அகழாய்வுப் பணியை அமர்நாத் ராமகிருஷ் ணன் தலைமையில் மேற்கொள் ளவும், ஒன்றிய அரசு வசமி ருக்கும் 2ஆம் கட்ட அகழாய் வில் கண்டெடுக்கப்பட்ட 2200 ஆண்டு பழைமையான 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழங் கால பொருட்களை மாநில அரசிடம் ஒப்படைக்கவும், அந்தப் பொருட்களை கீழடி யில் அருங்காட்சியகம் அமைத்து காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந் தார்.
இந்த மனு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி தன பால் முன்பு விசாரணைக்கு வந்தது. ஒன்றிய அரசு சார்பில், “அமர்நாத் ராமகிருஷ்ணன் கடந்த 2017ஆ-ம் ஆண்டு கவுகாத்திக்கு மாற்றம் செய்யப் பட்டு, அதன்பின்பு கோவா, பிறகு சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற் போது தென்னிந்திய கோயில் கள் தொல்லியல் கண்காணிப் பாளராக உள்ளார்.
கீழடி அகழாய்வு குறித்த அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. கீழடி 2ஆ-ம் கட்ட அகழாய்வில் மொத்தம் 5,765 பொருட்கள் கிடைத்தன.
அவை அனைத்தும் சென் னையில் உள்ள ஒன்றிய தொல்லியல் கண்காணிப்பா ளர் அலுவலகத்தில் ஒப்படைக் கப்பட்டுள்ளது.
இப்பொருட்கள் விரைவில் தமிழ்நாடு அரசிடம் ஒப் படைக்கப்படும்” எனத் தெரி விக்கப்பட்டது.
பின்னர் தலைமை நீதிபதி அமர்வு, “தொல்லியல் ஆய் வாளர் அமர்நாத் ராமகிருஷ் ணன் சென்னையில் பணியில் உள்ளார். அவரை இடமாற்றம் செய்வதில் நீதிமன்றம் முடி வெடுக்க முடியாது. கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப் பட்டுள்ளது.
ஒன்றிய அரசு 9 மாதங்களில் கீழடி 2 கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடவுள் ளது.
அந்த அறிக்கை வெளி யானதும் இந்திய தொல்லியல் துறையிடம் உள்ள 5,765 அகழாய்வுப் பொருட்களை ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசி டம் ஒப்படைக்க வேண்டும்.
அந்தப் பொருட்களை தமிழ் நாடு அரசு பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டது.
No comments:
Post a Comment