சென்னை, மார்ச் 7- சென்னையில் உலக மகளிர் நாளையொட்டி 5 ஆயிரம் பெண் காவலர் உலக சாதனைக்காக அணி வகுத்து நின்ற காட்சி அரங்கேற்றப்பட்டது.
உலக மகளிர் நாளையொட்டி சென் னையில் காவல்துறையினர் ஒரு வித்தி யாசமான உலக சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
நேற்று (6.3.2024) மாலை எழும்பூர் ராஜ ரத்தினம் விளையாட்டு மைதானத்தில் இந்த சாதனை நிகழ்ச்சி நடை பெற்றது.
சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தலைமை இயக்குநர் சீமா அகர்வால், காவல்துறை ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோர் முன்னி லையில் இதுதொடர்பான விழா நடைபெற்றது.
பெண்கள் உதவி எண் 1091, பெண்கள் உதவி மய்ய எண் 181 மற்றும் அவள் திட்டம், காவல் உதவி செயலி போன்ற எண்களும், எழுத்து களும் வடிவமைப்பு செய்து 5 ஆயிரத்து 50 பெண் காவலர் ஒரே நேரத்தில் அணி வகுத்து நின்றனர். இது கண்கொள்ளா காட் சியாக இருந்தது ‘டிரோன்’ கேமரா மூலம் இந்த காட்சி படம்பிடிக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப் பட்டது.
சிவப்பு, நீலம், பச்சை ஆகிய நிறங் களில் ‘டி சர்ட்’ அணிந்து பெண் காவலர்கள் இந்த அணி வகுப்பில் ஈடுபட் டனர்.
உலக சாதனை : உலக சாதனையாக கருதப் படும் இந்த நிகழ்ச்சிக் கான சான்றிதழ் காவல் துறை தலைமை இயக் குநர் சீமா அகர்வால், காவல்துறை ஆணை யர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரிடம் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் பேசிய காவல்துறை ஆணை யர் சந்தீப் ராய் ரத் தோர், சென்னை காவல் துறையில் 26 சதவீதம் பெண் காவலர்கள் உள்ளனர். பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பு நகரம் சென்னை’ என்றும் குறிப்பிட்டார்.
விழா தொடக்கத்தில் இணை ஆணையர் கயல்விழி வரவேற்று பேசினார். விழா முடிவில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் செந்தில்குமாரி நன்றி தெரிவித்தார். விழா அரங்கம் முழுவதும் பெண் காவலர்கள் மயமாக காட்சி அளித்தது
No comments:
Post a Comment