அன்னை மணியம்மையாரின் 46ஆம் ஆண்டு நினைவு நாளில் (16.3.2024) தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் விவரம் வருமாறு:
புதுச்சேரி
புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் 16.03.2024 சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் அன்னை மணியம்மையாரின் நினைவு நாள் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.
திராவிடர் கழக மாநிலத் தலைவர் சிவ.வீரமணி அன்னையாரின் படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தி கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார்.
மாவட்டத் திராவிடர் கழக மகளிரணித் தலைவர்
அ.எழிலரசி தலைமையில் மாநில எழுத்தாளர் மன்றத் துணைப் பொதுச் செயலாளர் வி.இளவரசி சங்கர் பொதுக்குழு உறுப்பினர் விலாசினி இராசு மாவட்டத் தலைவர் வே.அன்பரசன், ஆகியோர் முன்னிலையில். ஜெ. வாசுகி வரவேற்புரை ஆற்றினார்.
அன்னை மணியம்மையாரின் பன்முகம் என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் செயலாளர் கவி.வெற்றிச்செல்வி உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் காப்பாளர் இர.இராசு, மாவட்டச் செயலாளர் கி.அறிவழகன், துணைத் தலைவர் மு.குப்புசாமி, பொதுக்குழு உறுப்பினர் லோ.பழனி, மாநிலப் பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கு.இரஞ்சித்குமார், மாவட்டத் தலைவர் நெ.நடராசன், அமைப்பாளர் மு.ந.நல்லையன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் கோ.மு.தமிழ்ச்செல்வன், செயலாளர் ஆ.சிவராசன், தொழிலாளரணிச் செயலாளர் கே.குமார், இளைஞரணித் தலைவர் தி.இராசா, துணைத் தலைவர் ச.பிர பஞ்சன், புதுச்சேரி நகராட்சி தலைவர்கள் எஸ்.கிருஷ்ணசாமி, மு.ஆறுமுகம், , வில்லியனூர் கொம்யூன் தலைவர் கு.உலக நாதன், ஊடகவியலாளர் பெ.ஆதிநாராயணன், மு.வீரமணி, சமூக செயல்பாட்டாளர்கள் வீர.மோகன், தீனா, எழுத்தாளர் புதுவை பிரபா, பி.கல்பனா, சிவ.வீரகண்டமணி, ம.ஸ்டாலின், ஆ.ரேணுகா, ந.சுமதி, உட்பட பலர் கலந்து கொண்டனர்
நிறைவாக ப.தேவகி நன்றி கூறினார்.
ஈரோடு
16.03.2024 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் “அன்னை மணியம்மையார் நினைவு நாள் நிகழ்ச்சியாக அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. ஈரோடு தோழர்கள் த.சண்முகம், கோ.பாலகிருட்டி ணன், பேரா.ப.காளிமுத்து. மா.மணிமாறன், ப.சத்தியமூர்த்தி, கோ.திருநாவுக்கரசு, வீ.தேவராஜ், தே. காமராஜ், பவானி அசோக் குமார், மாலதி பெரியசாமி, நா.கண்ணம்மா ஆகி யோர் கலந்துகொண்டனர்.
திருச்சி கைவல்யம் முதியோர் இல்லம்
அன்னை ஈ.வெ.ரா மணியம்மை அவர்களின் 46 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி 16.03.2024 அன்று திருச்சி, சாமி கைவல்யம் முதியோர் இல்லத்தில் உள்ள அனைவரும் அன்னையின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக தொண்டறத்தாய் திராவிடர்கழக மேனாள் தலைவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு நாள் மற்றும் சுயமரியா தைச் சுடரொளிகள் நினைவேந்தல் நிகழ்ச்சி நாகர்கோவில், ஒழுகினசேரி தந்தை பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. தொண்டறத் தாய் அன்னை மணியம்மையார் அவர்களுடைய படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப் பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு குமரி மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கி உரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் முன்னிலை வகித்து அன்னையார் தொண்டுகள், இராவணலீலா நடத்திய அன்னையாரின் துணிச்சல், தந்தை பெரியாருக்குப் பின் இயக்கத்தை எழுச்சிகரமாக நடத்தியவரலாறு குறித்தும், திராவிடர்கழக எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் உரையாற்றினார்.
பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு, கழகக் காப்பாளர் ஞா.பிரான்சிஸ், கழக மாவட்டத் துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன், மாநகர தலைவர் ச.ச.கருணாநிதி, பொன்.பாண்டியன், புத்தக படிப்பாளர் இராஜா பங்கேற்று உரை யாற்றினார்கள். கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணிமேகலை வரவேற்புரையாற்றினார். தோவாளை ஒன்றிய கழக தலைவர் மா.ஆறுமுகம், செயலாளர் ந.தமிழ்அரசன், மற்றும் பலர் பங்கேற்றனர்.
குடியாத்தம்
அன்னை மணியம்மையார் 46 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி குடியாத்தம் நகரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கும் அன்னை மணியம்மையாரின் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட கழகக் காப்பாளர்கள்
வி.சடகோபன், ச.ஈஸ்வரி, மாவட்ட தலைவர் வி.இ.சிவக்குமார், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் இர.அன்பரசன், நகர தலைவர் சி.சாந்தகுமார், நகர அமைப்பாளர் வி.மோகன், ஓவியர் பரமசிவம், மற்றும் பெரியார் பிஞ்சுகள் கலந்து கொண்டார்கள்.
சிவகங்கை
தொண்டறத் தாய் அன்னை மணியம்மையார் நினைவு நாளான 16.03.2024 அன்று காலை 10.00 மணிக்கு சிவகங்கை பையூர் பிள்ளை வயல் சமத்துவபுரத்தில் அமைத்துள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் சிவகங்கை மாவட்ட கழக தலைவர் இரா. புகழேந்தி, மாவட்ட அமைப்பாளர் ச.அனந்த வேல், பெரியார் பெருந் தொண்டர் வேம்பத்தூர் செயராமன், திராவிட முன்னேற்ற கழகத்தின் பையூர் கிளைச் செயலாளர் திரு. மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டு வீர வணக்கம் செலுத்தினர்.
No comments:
Post a Comment