மணிப்பூரில் பிஜேபி ஆட்சியின் லட்சணம் 4ஆவது முறையாக ராணுவ அதிகாரி கடத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 9, 2024

மணிப்பூரில் பிஜேபி ஆட்சியின் லட்சணம் 4ஆவது முறையாக ராணுவ அதிகாரி கடத்தல்

இம்பால், மார்ச் 9 மணிப்பூரில் கடந்தாண்டு மே மாதம் இனக் கலவரம் ஏற்பட்டது. இதனால் அங்கு அமைதியை ஏற்படுத்தும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் தீவிரவாதிகளை எளிதில் அடையாளம் காண, மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இந்நிலையில் தவுபல் மாவட்டத்தைச் சேர்ந்த கொன்சம் கேடா சிங் எனும் ஜூனியர் ராணுவ அதிகாரியை, அவரது வீட்டிலிருந்து அடையா ளம் தெரியாத நபர்கள் நேற்று (8-4-2024) காலை கடத்திச் சென்றனர். அவரை மீட்கும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

அவர் எதற்காக கடத்தப்பட் டார் என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. மணிப்பூரில் பணிக்கு வரும் அல்லது விடுமுறை யில் வரும் வீரர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் கடத்திச் செல்லப்படுவது கடந்த ஆண்டு மே மாதம் முதல் 4 முறை நடை பெற்றுள்ளது. ராணுவத்தினரை கடத்திச் செல்லும் நிகழ்வு தொடர்ந்தால், மணிப்பூரில் மீண்டும் ராணுவ சிறப்பு அதிகாரச் சட்டம் அமலாகும் சூழல் ஏற்படும் என மணிப்பூர் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகாரி கோன்சம் கேடா சிங் குடும்பத்துக்குக் கடந்த காலங்களில் கடத்தல், மிரட்டல் கிடைத்த தாகவும், மிரட்டி பணம் பறிப்ப தற்காக கடத்தல் நடைபெற்று இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இது 4 ஆவது நிகழ்வு: கடந்த சில மாதங்களாகவே மணிப்பூரில் ராணுவ வீரர்கள், காவல் அதிகாரிகள் அல்லது அவர்களது உறவினர்கள் என யாரேனும் கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வரிசையில் இன்று நடந்திருப்பது 4 ஆவது நிகழ்வு. கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி இம்பாலில் கூடுதல் காவல்துறை மாவட்டக் கண்காணிப்பாளர் ஒருவர் கடத்தப் பட்டார். மைத்தேயி குழுவின் ஆயுதம் தாங்கிய பிரிவினர் அவரைக் கடத்திச் சென்றனர்.
குறிப்பு: கடத்தப்பட்ட ராணுவ அதிகாரி இன்று மீட்கப்பட்டார்.

No comments:

Post a Comment