குரூப் 4 பதவிக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 9, 2024

குரூப் 4 பதவிக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம்

featured image

சென்னை,மார்ச் 9- குரூப்- 4 பதவிகளில் வரும் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவி யாளர்- 2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து-தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளர்க்- 3, தனி செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற் சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர், காவலர்- 1,177, இள நிலை ஆய்வாளர்- 1 ஆகிய 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங் களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி வெளியிட்டது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கடந்த மாதம் (பிப்ரவரி) 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறி வுறுத்தப்பட்டு இருந்தது.
பொதுவாக டி.என்.பி.எஸ்.சி. நடத்தக்கூடிய தேர்வுகளில் அதிக மானோர் விண்ணப்பிக்கக்கூடிய தேர்வாக குரூப்-4 பணியிடங்களுக் கான தேர்வு இருந்து வருகிறது.
அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களுக்கும் தேர் வர்கள் போட்டிப்போட்டு விண் ணப்பித்தனர்.
விண்ணப்பப் பதிவு நீட்டிக் கப்படும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் இருந்த நிலையில், அதுதொடர்பான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஏற்கனவே அறிவித்தபடி, கடந்த மாதம் 28ஆம் தேதியுடன் விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி 6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கு 20 லட்சத்து 37 ஆயிரத்து 94 பேர் விண்ணப்பித்து இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்து இருக்கிறது. அதாவது ஒரு பணியிடத்துக்கு சுமார் 326 பேர் போட்டியிடுகின்றனர்.

விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்து தேர்வு வருகிற ஜூன் மாதம் 9ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதற்கு முன்பு கடந்த 2022ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியான 7 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குரூப்- 4 பணியிடங் களுக்கு 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 பேர் விண்ணப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment