தேர்தல் பிரச்சாரத்துக்காக சேலத்துக்கு விமானப்படை ஹெலிகாப்டரில் வந்த மோடி: நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளிடம் காங்கிரஸ் மனு
சேலம், மார்ச் 22- மக்களவைத் தேர்தல் பிரச் சாரத்துக்கு, இந்திய விமானப்படை ஹெலி காப்டர்களைப் பயன்படுத்தியதாக பிரதமர் மோடி மீது புகார் தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர், பிரதமர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேர்தல் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஓபிசி பிரிவு மாநிலத் துணைத் தலைவர் செந்தில் மற்றும் கட்சியினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து, தேர்தல் அலுவல கத்தில் புகார் மனு அளித்தனர். பின்னர், காங்கிரஸ் ஓபிசி பிரிவு மாநிலத் துணைத் தலைவர் செந்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பிரதமர் மோடி, சேலம் கெஜல்நாயக்கன் பட்டியில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் மார்ச் 19-ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இதில் பங்கேற்பதற்காக, இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் சேலத்துக்கு வந்தார். அவரது ஹெலி காப்டருக்கு பாதுகாப்பாக மேலும் இரண்டு ஹெலிகாப்டர்களும் வந்தன. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலை யில், இந்திய விமானப்படை ஹெலிகாப் டர்களை தேர்தல் பிரச்சாரத்துக்காக பயன் படுத்தியது, சட்டப்படி குற்றமாகும்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975இல் தேர்தல் பிரச்சாரத்துக்கு இந்திய விமானப் படை ஹெலிகாப்டரைப் பயன்படுத்தியதால், தேர்தல் ஆணையத்தால் அவரது பிரச்சாரத் துக்கு தடை விதிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளின்படி, பிரதமர், முதல மைச்சர் உள்பட எந்த தலைவரும், தேர்தல் பிரச்சாரத்துக்கு அரசு இயந்திரத்தைப் பயன் படுத்தக் கூடாது.
தேர்தல் காரணங்களுக்காக சேலம் மாந கராட்சி மேயர், துணைமேயர் ஆகியோரது அதிகாரப்பூர்வ வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டன. அதே விதி பிரதமருக்கும் பொருந்தும். எனவே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொடுக்கப்பட்டுள்ள புகார் மனு மீது விசாரணை நடத்தி, பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளி மாணவர்களைப் பரப்புரைப்புக்கு பயன்படுத்தியது தொடர்பாக பிரதமர் மீது புகார்
கோவை, மார்ச் 22- பா.ஜ.க. சார்பில் கோவை யில் 18.03.2024 அன்று நடைபெற்ற வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது தேர்தல் நடத்தை விதி மீறலாக கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குறித்து கண்டனங்கள் எழுந்தது. தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களைப் பயன் படுத்தக் கூடாது என்ற விதிமுறை இருக்கும் நிலையில், பிரதமர் மோடி கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளிலேயே பள்ளி மாணவர்கள் பயன்படுத்தப்பட்டது சர்ச் சையை ஏற்படுத்தியது. பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அந்த காட்சிப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சி யரும், தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலகத் திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.வினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த புகார் மனுவில், “கோவையில் நடைபெற்ற பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பள்ளி மாணவர்களைப் பங்கேற்க வைத்தது தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறிய செயலாகும். இந்த நிகழ்ச்சிக்காக பள்ளிக் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி சாலை ஓரங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.
மேலும் வாரணாசி தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளராக இருக்கும் பிரதமர் மோடி, கோவை அரசு பங்களாவில் தங்கியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
‘அரசு நிதியில் பிரச்சாரம்’ – மோடி மீது தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங். புகார்
புதுடில்லி, மார்ச் 22- பிரதமர் நரேந்திர மோடி தனது தேர்தல் பிரச்சாரத்துக்கு அரசு நிதியை பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலை வரும் மாநிலங்களவை உறுப்பினருமான டெரெக் ஓ பிரையன், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எழுதியுள்ள புகார் கடிதத் தில், “மக்களவைத் தேர்தல் குறித்த அறிவிப்பை கடந்த 16-ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன் பிறகு, வாக்காளர்களுக்கான பிரதமர் மோடியின் கடிதம் பிரதமர் அலுவலகம் வாயிலாக வெளியிடப்பட்டது.
வேண்டுமென்றே அந்தக் கடிதத்தில் மார்ச் 15 என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
வாக்காளர்களுக்கான மோடியின் கடிதம் பிரதமர் அலுவலகம் வாயிலாக மக்களிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்காக அரசுப் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறிய செயல் இது.
எனவே, இனி இது போன்று அரசு செலவில் பிரச்சாரம் செய்யக் கூடாது என பாஜகவுக்கும் அதன் வேட்பாளர் மோடிக் கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண் டும். அதோடு, பிரதமர் அலுவலகம் வெளியிட்ட கடிதம் திரும்பப் பெறப்பட வேண்டும். இதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். அதோடு, பிரதமர் அலுவலகம் மூலமாக அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்துக்கு ஆன செலவை நரேந்திர மோடியின் தேர் தல் செலவு கணக்கில் சேர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment