பந்திப்பூர், மார்ச் 14 வனவிலங் குகளை பாதுகாப்பதில் கருநா டகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களும் சிறப் பாக செயல்படுகின்றன எனவும், அதனால்தான் இந்த மாநிலங் களில் வனவிலங்குகளின் எண் ணிக்கை அதிகரித்துள்ளது என வும் கருநாடக வனத்துறை அமைச் சர் ஈஸ்வர் காந்த்ரே தெரிவித் துள்ளார்.
ஆண்டுதோறும் அதிகரித்து வரும் மக்கள்தொகை, காடுகள் ஆக்கிரமிப்பு, வனப்பகுதியில் உரு வாகும் கட்டுமானங்கள், வனங்கள் அழிக்கப்படுதல் உள்ளிட்ட வற்றால், காடுகளை புகலிடமாகக் கொண்டு வாழும் வனவிலங்குகள் வேறு வழியின்றி உணவுக்காகவும், நீருக்காகவும் காட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவாகிறது.
இது போன்ற சூழ்நிலையில், மனித-விலங்கு மோதல்களைக் குறைப்பதற்கும், வன விலங்களை பாதுகாப்பது குறித்து தமிழ்நாடு, கருநாடகா மற்றும் கேரளா ஆகிய 3 மாநி லங்கள் இணைந்து ஒரு ஆலோ சனைக் கூட்டம் கூட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி (மார்ச் 10) அன்று கருநாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தின் சஃபாரி வரவேற்பு மய்யம் அருகே இதற்கான ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. கருநாடகா வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே, கேரளா வனத் துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் ஆகியோர் தலைமையில் நடை பெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், 3 மாநில வனத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண் டனர். கூட்டத்தில் அமைச்சர் ஈஸ்வர காந்த்ரே பேசுகையில், “ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் இந்த கூட்டம் நடை பெறவில்லை. தென்னிந்திய மூன்று மாநிலங்களின் வனவிலங்குகளை யும், வனத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற அக்கறை மற்றும் சுயமுயற்சியால் உருவான கூட்டம் இது” என்றார்.
மேலும், “பொதுவாக வனத்தில் வாழும் மிருகங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்கின்றன. தமிழ்நாடு, கேரளா, கருநாடகா இடையே பல நூறு ஆண்டுகளாக யானைகள் சுதந்திரமாக சுற்றித் திரிந்து வருகின்றன. வனவிலங்குகளுக்கு மாநில எல்லை என்று ஒன்றும் கிடையாது” என்றார்.தொடர்ந்து பேசிய அவர், “கூடிய விரைவில் வன விலங்குகளால் ஏற்படும் உயிர்ச்சேதம் மற்றும் பயிர் சேதம் ஆகியவற்றைக் குறைக்க நட வடிக்கை எடுக்கப்படும். இது குறித்து விவாதிக்கப்பட்டு, விரை வில் அதற்கான திட்ட அறிக்கை வெளியிடப்படும்.வனவிலங்கு களை பாதுகாப்பதில் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களாலும் சிறப் பாகச் செயல்படுகின்றன. அத னால்தான் இந்த மாநிலங்களில் வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது போன்ற முயற்சிகளை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த கூட் டத்தில் காட்டுத்தீயை கட்டுப்படுத் துவது, வன விலங்குகள் வேட்டை யாடுவதைத் தடுப்பது உள்ளிட் டவை குறித்து விவாதிக்கபட்டது.
No comments:
Post a Comment