இலங்கை கடற்படை அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 22, 2024

இலங்கை கடற்படை அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது

தமிழர்கள் என்பதால் ஒன்றிய அரசு அலட்சியமா?

ராமேசுவரம், மார்ச் 22 ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் (20.3.2024) சுமார் 500 விசைப் படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். நள்ளிரவு நெடுந்தீவு அருகே, விக்டோரியன், அருளா னந்தன், ராஜ் மகத்துவம் ஆகியோருக்குச் சொந்தமான 3 விசைப் படகுகளை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்தாகக் கூறி, அவற்றைப் பறிமுதல் செய்தனர்.

மேலும், படகுகளில் இருந்த அந்தோணி ஆரோன், சேசுராஜ், திருபால், ஜெகன், அந்தோணி காட்சன், ராஜசேகர், ராஜா முகமது, ரஞ்சித், ராமு, அந்தோணி காயின், மோகன், மனோகரன், சேகரன், முருகன்,ராஜ், பரலோகராஜ், ஜஸ்டின், ராஜ்குமார், பாலமுருகன், முனீஸ்வரன், மதன்குமார், ஹரிகிருஷ்ணன், கோவிந்தன், அல்லாஹ் பிச்சை, மாரி கருப்பையா ஆகிய 25 மீனவர்களை கைது செய்து, காங்கேசன் துறை துறைமுகத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் 25 மீனவர்களையும் ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். அதேபோல, நேற்று (21.3.2024) அதிகாலை தலை மன்னாரில் 2 படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், அவற்றில் இருந்த ஜஸ்டின் திரவியம், கோவிந்தன், முனி யராஜ், ஆரோக்கியம், சகயா நிக்சன், முத்துராமலிங்கம், முனிய சாமி ஆகிய 7 மீனவர்களைக் கைது செய்து, வவுனியா சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment