புதுடில்லி, மார்ச் 6 பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந் துள்ள “இந்தியா” கூட்டணி பிரம் மாண்ட எழுச்சி பெற்றுள்ளது. “இந்தியா” கூட்டணியை கண்டு தோல்வி பயத்தால் மிரண்டுள்ள பாஜக, கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தவும், சில கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்கவும் தீவிரமாக களமிறங்கியது.
இதற்காக ‘பாரத ரத்னா’ விருது, மாநிலங்களவை பதவிகள் மற்றும் ஒன்றிய அமைப்புகள் மூலம் மிரட் டல் விடுத்து “இந்தியா” கூட்டணியில் இருந்த நிதிஷ்குமாரின் அய்க் கிய ஜனதா தளம், ஜெயந்த் சவுத்ரி யின் ராஷ்டிரிய லோக் தளம் ஆகிய இரண்டு கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்தது. இந்த 2 கட்சிகளுக்கு மேல் “இந்தியா” கூட்டணியில் அங் கம் வகிக்கும் மற்ற 26 கட்சிகள் மோடி அரசின் மிரட்டலுக்கு அஞ்சாமல் தொகுதி பங்கீடு வேலைகளி லும், தேர்தல் பிரச்சார வியூகங்களி லும் களமிறங்கின. இதனால் தோல்வி பயத்தில் ஆழ்ந்துள்ள “கோடி மீடியா” (கோயபல்ஸ் – மோடி) ஊடகங்களில் பாஜகவின் செல்வாக்கு, பாஜக வெல்லும் நிலை யில் உள்ளது போல கருத்துக் கணிப் புகளை வெளியிட்டு வருகிறது.
மேலும் பிரதமர் மோடி தினமும் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுலா மேற்கொண்டு ரூ.60,000 கோடியில் மக்கள் நலப்பணித்திட் டம் எனக் கூறி அரசு விழாவை, பிரச்சார விழாவாக மாற்றி மக்களை ஏமாற்றி வரும் நிலையில், மக்களவை தேர்தலுக்காக கூகு ளில் விளம்பர வணிகத்தையும் பாஜக தொடங்கி யுள்ளது.
ஒரு நாளைக்கு ஒரு கோடி
வணிக நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தை பிரபலப்படுத்த கூகுள் நிறுவனத்திடம் குறிப்பிட்ட தொகை வழங்கி, தங்கள் நிறுவன பெயர்களை மக்கள் இணையத்தில் பார்க்கும்படி விளம்பரம் செய் வார்கள். “இந்தியா” கூட்டணியின் எழுச்சியால் தோல்வி பயத்தில் உள்ள பாஜக வணிகமுறை விளம் பரத்தில் மோடி படம் மூலம் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரி 29 முதல் இந்த கூகுள் விளம்ப ரத்தை தொடங்கிய பாஜக பிப்ரவரி 28 வரை 30 நாட்களில் ரூ.30 கோடி செலவு செய்துள்ளது.
ஒரே ஒரு காட்சிப் பதிவு மட்டுமே தேறியது
ரூ.30 லட்சம் செலவு செய்து ஒரே ஒரு காட்சிப் பதிவையும், ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை செலவழித்து 50 காட்சிப் பதிவு களையும், ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரை செலவு செய்து 100 காட்சிப் பதிவுகளையும், ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவழித்து 124 காட்சிப் பதிவுகளையும், ரூ.1 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை செலவு செய்து 109 வீடியோக்களையும் உருவாக்கி, அதனை கூகுள் தளத்தில் வெளி யிட ஒருநாளைக்கு ரூ. 1 கோடி செலவு செய்து 30 நாட்களில் ரூ.30 கோடி செலவு செய்துள்ளது. இதில் ரூ.30 லட்சம் செலவு செய்து உரு வாக்கப்பட்ட ஒரே ஒரு காட்சிப் பதிவு மட் டுமே ஒரு கோடி பேர் பார்த்துள்ளனர். மற்ற காட்சிப் பதிவுக்கள் சாதாரண டிரெண்டிங் லிஸ்டில் கூட தேறவில்லை.
“நோ” தென்னிந்தியா
மோடியின் கூகுள் விளம்பரங் கள் வட இந்திய மாநிலங்களில் மட் டுமே ஒளிபரப்பப்படுகிறது. அதா வது வடஇந்திய மக்கள் பார்க்கும் படி ஹிந்தி மொழிகளில் மட்டுமே விளம்பரத்திற்காக செலவு செய் தது. தென்னிந்திய மாநில மக்களி டம் அவர்களுடைய வாட்ஸ் ஆப் பில் அனுப்பினால் கூட மோடியை கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்ட பாஜக, தென்னிந்தியாவில் கூகுள் விளம்ப ரத்திற்காக மோடியை வைத்து பாஜக விளம்பரம் செய்யவில்லை.
2019இல் வெறும் ரூ.12.3 கோடி
கடந்த 2019 மக்களவை தேர்த லில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை நான்கு மாத காலப்பகுதியில் கூகுள் விளம்பரத்திற்காக 12.3 கோடி ரூபாய் மட்டுமே செலவிட்டுள்ளது. ஆனால் தற்போது ஒரே ஒரு மாதத் திற்கு மட்டும் ரூ.30 கோடி செலவு செய்துள்ளது. இதற்கு எல்லாம் காரணம் “இந்தியா” கூட்டணி மீதான அச்சம் மட்டுமே.
No comments:
Post a Comment