குஜராத்தில் 29 ஆண்டுகளாக புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டவில்லையாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 3, 2024

குஜராத்தில் 29 ஆண்டுகளாக புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்டவில்லையாம்!

பா.ஜ.க. அரசு ஒப்புதல்

அகமதாபாத், மார்ச் 3 பாஜக ஆளும் குஜராத் மாநிலத் தில் தற்போது நிதிநிலை சட்டமன்ற கூட்டத்தொடர் நடை பெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் புதிய மருத்துவ கல்லூரிகள் குறித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு குஜராத் சுகாதாரத் துறை அமைச்சர் அளித்த பதிலில், “குஜராத்தில் ஆறு அரசு மருத்துவக் கல் லூரிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. 1995-ஆம் ஆண்டி லிருந்து புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் எதுவும் கட்டப்படவில்லை. 2023-ஆம் ஆண்டு மட்டும் 4 புதிய கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
அதாவது குஜராத்தில் 29 ஆண்டு களாக புதிய அரசு மருத்துவக்கல்லூரி கள் கட்டவில்லை என பாஜக அரசு ஒப் புக்கொண்டுள்ளது. குஜராத்தில் 1871- ஆம் ஆண்டு அகமதாபாத்தில் முதல் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்ட நிலையில், இறுதியாக காங்கிரஸ் ஆட் சிக்காலத்தில் 1995-ஆம் ஆண்டு பாவ்நக ரில் மருத்துவக் கல்லூரி நிறுவப்பட் டுள்ளது. அதன்பின்னர் எந்த மருத்து வக்கல்லூரியும் அங்கு அமைக்கப்பட வில்லை. குஜராத் மாநிலத்தில் கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் முறையாக பாஜக ஆட்சி யமைத்தது. அதிலிருந்து தற்போதுவரை அங்கு பாஜக ஆட்சியே நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment