சென்னை,மார்ச் 19- மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி யில், திமுக 21 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 19 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
தொகுதிப் பங்கீடு முடிந்த நிலையில் இன்று (19.3.2024) அல்லது நாளை வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட உள்ளது. வேட்பு மனுத் தாக்கல் நாளை (மார்ச் 20) தொடங்கும் நிலை யில், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு மற்றும் பிரச்சார நிறைவு நாட்களுக்கு இடையே 18 நாட்களே உள்ளன.
பிரச்சாரத்துக்கு மிகக் குறைவான நாட்களே இருக்கும் நிலையில், முன் கூட்டியே பிரச்சாரத்தை தொடங்க திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
அந்த வகையில். திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வரும் மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
திருச்சி சிறுகனூரில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங் கேற்கிறார்.
தொடர்ந்து மார்ச் 23ஆம் தேதி சொந்த ஊரான திருவாரூரில் நடை பெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
அதன்பின் 39 தொகுதிகளுக்கும் செல்ல திட்டமிட்டுள்ள முதலமைச்சர், 15 நாட்கள் சுற்றுப்பயணம் மேற் கொள்ள முடிவெடுத்திருப்பதாக தக வல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, இரண்டு, மூன்று தொகு திகளுக்கு பொதுவான 15 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும் அவர் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment