மீதிப் பணம் யார் சட்டைப் பைக்குள் போனது?
பிரதமர் மோடிக்கு டி.ஆர்.பாலு எம்பி கேள்வி
சென்னை,மார்ச் 20– கடந்த 2022ஆம் ஆண்டில் 5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் போக வேண்டிய 5ஜி வெறும் 1.5 லட்சம் கோடிக்கு ஏலம் போனது ஏன்? மீதி பணம் யார் சட்டை பைக்கு போனது? என்று பிரதமர் மோடிக்கு திமுக பொருளாளர் நாடாளுமன்ற மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பி யுள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று (19.3.2024) வெளியிட்ட அறிக் கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டுக்கு வாரம் தோறும் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ள பிரதமர் மோடி, இந்த வாரம் சேலத்தில் பேசி விட்டுச் சென்றுள்ளார். கடந்த தேர்தல் காலங்களில் பிரதமர் கள் ஓரிரு முறைதான் தமிழ்நாடு வந்து பிரச்சாரம் செய்தனர்.
ஆனால், பிரதமர் மோடி பல்லடம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, கன் னியாகுமரி, கோவை, சேலம் என அடிக்கடி தமிழ்நாடு வந்து பிரச்சாரம் செய்கிறார்.பிரதமர் பதவிக்கு நிரந்தர ஓய்வு தர, தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல; இந்திய மக்கள் அனைவரும் தயராகிவிட்டனர்.
சேலம் ஆடிட்டர் ரமேஷ் கடந்த 2013ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட நிலையில், தற் போது அவரை நினைவுகூர்வது ஏன்? கோவை பேரணியில் 1998இல் நடைபெற்ற குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு ‘திடீர் இரங்கல்’ செலுத்தப்பட் டது. இப்படியான நாடகத்தை தேர்தலுக்காக பாஜக ஆரம் பித்துள்ளது.
‘‘திமுக, காங்கிரசின் ஊழலைப் பற்றி பேச ஒருநாள் போதாது’’ என கூறியுள்ளார் பிரதமர் மோடி. தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த நிதியில் 50 சதவீதத்துக்கு மேல் பாஜகதான் வாங்கியது. சிபிஅய், அமலாக்கத் துறை, வருமானவரித் துறை போன்ற அதிகார அமைப்பு களை ஏவி, அதன் மூலம் நிறுவ னங்களிடம் இருந்து நன்கொ டைகளை மிரட்டிப் பறித்த பாஜக உத்தமர் வேடம் போடு கிறது.
காங்கிரஸ் ஆட்சியில் நடந்த 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வர்களை டில்லி சிபிஅய் நீதிமன்றம் 2017இல் விடுதலை செய்துவிட்டது. அதன் பிறகும் திமுகவின் பங்கு பற்றி பிரதமர் மோடி வலிந்து பேசிக் கொண்டி ருக்கிறார்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்டில் ரூ.5 லட்சம் கோடிக்கு ஏலம் போக வேண்டிய 5ஜி அலைக்கற்றை ரூ.1.50 லட்சம் கோடிக்குத்தான் ஏலம் போனது. மீதி பணம் யார் பாக்கெட்டுக்கு போனது என்பதற்கு பிரதமர் பதில் கூறுவாரா?
பெண் சக்தி பற்றி பிரதமர் மோடி, ‘‘பெண்களுக்குச் சேவை செய்ய உறுதி ஏற்று இருக்கி றோம். பெண்கள்தான் பாஜகவின் கவசமாக உள்ளனர்’’ என்று பேசியுள்ளார்.
மணிப்பூரில் நின்று அவரால் இப்படிப் பேச முடியுமா? ‘தமிழ் நாட்டைப் புண்ணிய பூமியாக மாற்றுவோம்’ என்கிறார் பிரத மர் மோடி.
திருநெல்வேலியும் தூத்துக் குடியும் சென்னையும் பெரு வெள்ளத்தில் சிக்கி பேரிடர் நிவாரணம் கேட்டு தமிழ்நாடு கையேந்தியபோது ஒரு பைசா கூட தராதவர், தமிழ்நாட்டைப் புண்ணிய பூமியாக மாற்றப் போகிறாராம்.
‘ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ் நாட்டிலிருந்துதான் எதிர்க்கட் சிகளுக்கு அழிவு தொடங்க தொடங்கப் போகிறது என பிரதமர் மோடி சொல்லியிருக் கிறார்.
ஏப்ரல் 19ஆம் தேதி பாஜகவுக்கு தான் பேரழிவுக் காலம் தொடங் கப் போகிறது. தோற்கப்போகி றோம் என்பதை உணர்ந்து அவர் இப்படி பேசுகிறார் போலும். 400 தொகுதிகள் வெற்றி பெறப் போவதாக அவர் சொல்லிக் கொள்கிறார்.
உண்மையில் 400 தொகுதிகள் வெற்றி பெறப் போகிறவர் இப்படி தரம்தாழ்ந்து பேச மாட் டார். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment