திருவெறும்பூர்,மார்ச் 5 – திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ்நகர் விரிவாக்கம் சுதானா அவென்யூ பகுதியில் வசிப்பவர் கண்ணன். இவர் திருவெறும்பூர் பகுதியில் திருமண மண்டபம் மற்றும் காம்ப்ளக்ஸ் வைத்துள் ளார். இவரது கட்டடப் பணிக்கு டைல்ஸ் வாங்குவதற்கு காட்டூர் கணேஷ்நகர் பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வரும் பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவி ரேகா என்பவரை அணுகியுள்ளார்.
ரேகா குஜராத் கம்பெனியில் மலிவு விலையில் டைல்ஸ் வாங்கி தருவதாக கூறி கண்ணனிடம் கடந்த 2022ஆம் ஆண்டு ரூ.2 லட்சத்து 20ஆயிரம் பணம் பெற் றுள்ளார்.
ஆனால் சொன்னபடி டைல்ஸ் வாங்கித் தரவில்லை. ரேகாவிடம் இதுகுறித்து தொழிலதிபர் கண் ணன் கேட்கவே ரேகா வாங்கிய பணத்திற்கு காசோலை கொடுத் துள்ளார். கண்ணன் காசோ லையை வங்கியில் வைப்புச் செய்ய சென்ற போது பணமின்றி காசோலை ரிட்டன் ஆகிவிட்டது.
இதையடுத்து காவல்துறையி னர் விசாரணையின்போது விரை வில் பணத்தை கொடுப்பதாக ரேகா கூறியுள்ளார்.
இந்நிலையில் ஒன்றரை ஆண்டு களாகியும் பணத்தை தராததால் 2.3.2024 அன்று திருச்சி காவல் துறை கண்காணிப்பாளர் வருண் குமார் மற்றும் திருவெறும்பூர் காவல்துறை துணை கண் காணிப்பாளர் அறிவழகன் ஆகி யோரிடம் புகார் செய்தார்.
அதன் அடிப்படையில் 3.3.2024 அன்று திருவெறும்பூர் காவல்துறையினர் ரேகாவை அழைத்து விசாரணை செய்த தோடு இந்நிகழ்வு குறித்து வழக்கு பதிவு செய்து ரேகாவை கைது செய்தனர்.
தொழிலதிபர் கண்ணன் திரு வெறும்பூர் வடக்கு மண்டல பாஜக தலைவர் செந்தில்ராமின் உறவினர் ஆவார்.
No comments:
Post a Comment