விடுதலை சிறுத்தைகள் - 2, மதிமுக-1, ம.நீ.ம. மாநிலங்களவை-1 : திமுக கூட்டணியில் உடன்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 9, 2024

விடுதலை சிறுத்தைகள் - 2, மதிமுக-1, ம.நீ.ம. மாநிலங்களவை-1 : திமுக கூட்டணியில் உடன்பாடு

சென்னை,மார்ச் 9- திமுக கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும் மதிமுகவுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டன. இதற்கான உடன்பாட்டில் திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் ஆகியோர் நேற்று (8.3.2024) கையெழுத்திட்டனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பணி களை ஆளும் கட்சியான தி.மு.க,கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தொடங்கி விட்டது.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி யில் கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளு மன்ற தேர்த லில் இருந்த கட்சிகள் அப்படியே தொடர்வதால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில், மற்ற கட்சி களை விட தி.மு.க முந்திக்கொண்டது.

அந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும். கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டன.அதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு தலா 2தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இருப்பினும், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

இழுபறி நீடித்தது

இதைத் தொடர்ந்து கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமு.க. விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுடன் தி.மு.க தலைமை தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. திமுக வுடன்,மதிமுக நடத்திய மூன்று கட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படவில்லை. அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலும் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்தது.

ம.தி.மு.க.வுக்கு ஒரு தொகுதி

இந்த நிலையில், தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை குழுவினருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அண்ணா அறிவாலயத்திற்கு நேற்று (8.3.2024) காலை வருகை தந்தார். அப்போது. முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் முன்னிலையில் ம.தி.முகவுக்கு ஒருதொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத் தானது. இந்த ஒப்பந்தத்தில் தி.மு.க. தலைவரும். முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கையெழுத்திட்டனர்.

தனிச்சின்னத்தில் போட்டி

இதனைத் தொடர்ந்து. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தி யாளர்களிடம் கூறியதாவது
நாடாளுமன்ற தேர்தலில் எங் களுக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எந்தத் தொகுதி என்பது குறித்து மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நிறைவு செய்த பிறகு கூறுவதாக உறுதி அளித் துள்ளார்கள். நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க. தனிச் சின்னத்தில் போட்டி யிடும். மாநிங்களவை தேர்தல் நடை பெற 15 மாதங்கள் உள்ளது. அதனால், தற்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து பேசவில்லை. அதுகுறித்து அப்போது பேசுவோம். தேர்தலில் 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வேன். தொகுதி பங்கீட்டில் நாங்கள் மனநிறை வுடன் இருக்கிறோம்.

-இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலைச்சிறுத்தைகளுக்கு இரண்டுதொகுதி

முன்னதாக, தலைமைச்செயலகத்தில் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று (8.3.2024) காலை திடீரென சந்தித்தார். இதில், தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டது.
இந்த சந்திப்புக்கு பிறகு, முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவா லயத்திற்குவந்தார். சிறிது நேரத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் அண்ணா அறிவால யம் வந்தார். அதன்பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரு தனித்தொகுதிகள்

ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.
பானை சின்னம்

இதன்பிறகு, திருமாவளவன் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தனித் தொகுதிகளில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மூன்று தனித்தொகுதிகள் மற்றும் ஒரு பொது தொகுதி வேண்டும் என்றும் அல்லது இரண்டு தனித்தொகுதிகள், ஒரு பொது தொகுதி வேண்டும் என்றோம். அடுத்தடுத்த நடந்த பேச்சுவார்த்தையில், தமிழ்நாடு மற்றும் இந்திய அளவிலான அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, கடந்த தேர்தலின்போது கையாளப்பட்ட தொகுதி பங்கீடு முறைக்கு உடன்பாடு தெரிவித்து அதன் அடிப்படையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. வரும் தேர்தலில் பானை சின்னத்தில் போட்டியிட உறுதி செய்துள்ளோம்.
தேர்தல் ஆணையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் பொது சின்னம் ஒதுக்கவேண் டும் என்று மனு கொடுத்துள்ளோம். தனிச் சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவதற்கு தி.மு.க. உடன்பாடு தெரிவித் துள்ளது.

-இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரசுடன் பேச்சுவார்த்தை

தி.மு.க. தலைமையிலான கூட்டணி யில் பெரும்பாலான கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிந்தநிலையில், தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட வில்லை.
காங்கிரஸ் கட்சியுடனான பேச்சு வார்த்தை இன்று (9.3.2024) நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மக்கள் நீதி மய்யம்

நடிகர் கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்திற்கு மாநி லங்களவையில் ஒரு இடம் ஒதுக்கப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment