பி.ஜே.பி. அறிவித்த 195 வேட்பாளர்களில் தற்போதுள்ள 33 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு மறுப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 4, 2024

பி.ஜே.பி. அறிவித்த 195 வேட்பாளர்களில் தற்போதுள்ள 33 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு மறுப்பு

புதுடில்லி, மார்ச். 4- மக்களவைத் தேர்தலுக்காக பாஜக நேற்று (3.3.2024) தமது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. 195 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டிய லில் 33 தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தல் தேதி ஓரிரு நாட் களில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான முழு ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மக்களவை தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை, வேட்பாளர்கள் தேர்வு ஆகியவற்றில் தீவிரம் காட்டி வருகின்றன.
மக்களவை தேர்தலுக்கான வேட் பாளர்களை ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சி உள்ளிட்டவை ஏற்கெனவே வெளியிட்டிருக்கின்றன. இந்த நிலை யில் பாஜக நேற்று 195 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. இதில் 34 ஒன்றிய அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர்.

அதே நேரத்தில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட 195 தொகுதிகளில் 35 நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை. அசாம் மாநிலத்தில் 5, சத்தீஸ்கரில் 4, டில்லியில் 5, ம.பியில் 7, ராஜஸ்தானில் 5, குஜராத்தில் 5 புதுமுகங்களுக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. மேலும் மேனாள் முதலமைச்சர்களான சிவராஜ் சிங் சவுகான், பிப்லாப் தேப் ஆகியோரும் மக்களவைத் தேர்தல் களத்தில் இறக்கப் பட்டுள்ளனர்.
அசாம் மாநிலத்தில் 5 புதுமுகங்களை களமிறக்கி உள்ளது பாஜக. தற்போ தைய நாடாளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வர் டெலி, ராஜ்தீப் ராய், ஹோரன் சிங், குயீன் ஓஜா பல்லாப் லோசன் தாஸ் ஆகியோருக்கு வாய்ப்பு தரப்படவில்லை.

சத்தீஸ்கரில் 4 புதுமுகங்களுக்கு வாய்ப்பு தந்துள்ளது பாஜக. ராய்ப்பூர் தொகுதியில் பிர்ஜ்மோகன் அகர்வால், ஜன்ஜிர் சம்பாவில் கம்லேஷ் ஜாங்டே, மகாசமுத்தில் ரூப் குமாரி சவுத்ரி, கான் கெரில் மோகன் மாதவி வேட்பாளர் களாக போட்டியிடுகின்றனர். நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுனில் குமார் சோனி, குஹராம் அஜ்கலே, சன்னி லால் சாஹூ, போஜ்ராஜ் நாக் ஆகியோர் கழற்றிவிடப்பட்டுள்ளனர்.

டில்லியில் ரமேஷ் பிதுரி, பர்வேஸ் வர்மா, மீனாக்‌ஷி லெகி, ஹர்ஷ் வர்தன் ஆகிய சிட்டிங் எம்பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை. மறைந்த மூத்த பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மகள், பன்சூரி ஸ்வராஜ் முதல் முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார்.
மேற்கு டில்லியில் கமல்ஜீத் ஷெராவத், தெற்கு டெல்லியில் சட்டமன்ற உறுப் பினர் ராம்வீர் சிங் பிதூரி, சாந்தினி சவுக் தொகுதியில் பிரவீன் காடெல்வால் போட்டியிடுகின்றனர்.
குஜராத்: குஜராத்தில் 5 நாடாளு மன்ற உறுப்பினர்ளுக்கு வாய்பு தரப் படவில்லை. சிட்டிங் எம்.பிக்களான பிரபாத்பாய் சவபாய் பட்டேல், 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கிரீத் சோலங்கி, மோகன்பாய் கல்யாண்ஜி குந்தாரியா, ரமேஷ்பாய் லவ்ஜிபாய் டாடுக், ரத்னசிங் மகான்சிங் ரதோட் ஆகியோருக்கு மீண்டும் சீட் கொடுக்க வில்லை.
ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத் தில் மேனாள் ஒன்றிய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா (யஷ்வந்த் சின்ஹா மகன்), 3 முறை நாடாளுமன்ற உறுப் பினரான சுதர்ஷன் பகத் ஆகியோருக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

மத்தியப் பிரதேசம்: இம்மாநிலத்தில் 7 புதுமுகங்களை பாஜக களமிறக்கி உள்ளது. விவேக் நாராயண் சேஜ்வால்கெர், கிருஷ்ணபால் சிங் யாதவ், ராஜ்பகதூர் சிங், ராம்கந்த் பகர்வா, சாத்வி பிரக்யா தாக்கூர், குணம்சிங் தாமோர் ஆகிய சிட்டிங் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான்: இம்மாநிலத்திலும் 5 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மீண் டும் போட்டியிட வாய்ப்பு தரப்பட வில்லை. சாரு, பரத்பூர், ஜலோர், உதய்பூர், பன்ஸ்வாரா தொகுதிகளில் புதுமுகங்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள் ளனர்.

மே.வங்கம், திரிபுரா: திரிபுராவில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதிமா போமுயிக்க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு மேனாள் முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப் போட்டியிடுகிறார். மேற்கு வங்கத் தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பர்லாவுக்கு வாய்ப்பு தரப்படவில்லை.

No comments:

Post a Comment