கார்ல் மார்க்ஸ் – எந்தக் காலத்துக்குமான சிந்தனையாளர்
கடந்த 1,000 ஆண்டுகளில் தலைசிறந்த சிந்தனையாளர் களுள் ஒருவர், உலகத் தொழி லாளர்களின் ஒற்றுமையை ஓங்கி ஒலித்த குரல், பொரு ளாதார மாமேதை, காலம் கடந்தும் அரசியல் தளங்களில் உச்சரிக்கும் பெயர்: கார்ல் மார்க்ஸ். கார்ல் மார்க்ஸ் எனும் மாமேதை மத்திய ஜெர்மனியில் 1816, மே மாதம் 5-ஆம் தேதி பிறந்தார்.
மார்க்ஸியத்தில் என்னென்ன கூறுகள் உள்ளன என்பதைத் தனது தொடர் ஆய் வுகள் மூலம்மார்க்ஸ் வெளிப்படுத்தினார்.
அரசியலின் பெயராலும், பொருளா தாரத்தின் பெயராலும், சமயத்தின் பெயராலும், நீதியின் பெயராலும், மக்களில் ஒரு வர்க்கத்தார் மற்றொரு வர்க்கத்தாரை எப்படியெல்லாம் சுரண்டி வாழ்கிறார்கள், எப்படியெல்லாம் அடிமைப் படுத்துகிறார்கள் என்பதை விவரிக்கும் ஒரு சமூக விஞ்ஞானமே மார்க்ஸியம்.
அறிவியலை எக்காரணம் கொண்டும் புறக்கணிக்காமல், அதை ஏற்றுக்கொண்டு, மனித குலத்தின் நலனுக்கு நல்வழியில் பயன்படுத்த வேண்டும் என்றே மார்க்ஸ் கனவு கண்டார். மார்க்ஸின் கனவு பல நாடுகளில் வெற்றிபெற்றுள்ளது. இனியும் வெற்றி பெறும்! “மனித குலத்துக்குச் சேவை செய்யும் வாய்ப்பைத் தேர்ந் தெடுத்து விட்டால், எந்தச் சுமையும் நம்மை மண்டியிடச் செய்ய முடியாது. ஏனெனில், அனைவரின் நன்மைக்குமான தியாகங்கள்” என்பார் மார்க்ஸ். மனித குலத்துக்கு என் றென்றைக்கும் தேவையான சிந்தனை யாளர் கார்ல் மார்க்சின் 141ஆவது நினைவு நாள் இன்று.
No comments:
Post a Comment