தமிழ்நாட்டில் ஏப்ரல்13 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 22, 2024

தமிழ்நாட்டில் ஏப்ரல்13 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

featured image

சென்னை,மார்ச் 22- மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் பள்ளிகளில் கோடை விடுமுறை ஏப்ரல் 13-ஆம் தேதியே தொடங்குவதாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
18ஆவது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் தொடங்குவதால் அந்தப் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும் என்பதால் பள்ளிகளில் இறுதித் தேர்வுகளை உடனடியாக நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழ்நாடு அரசு உள்ளது. இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் இது குறித்த சுற்றறிக்கை அனைத்து மாவட் டக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி இறுதித் தேர்வுகளை ஏப்ரல் இரண்டாம் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். 13- ம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட வேண்டும். மேலும் அனைத்து ஆசிரியர்களும் தேர்தல் குறித்து நடைபெறும் பயிற்சி உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலும் பங்கு பெற வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத் தப்பட்டுள்ளது.
மேலும் 23.4.2024 முதல் 26.4.2024 வரை விடைத்தாள்கள் திருத்துதல், தேர்வு முடிவுகளை வெளியிடுதல், அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆகிய பணிகளில் ஈடுபட வேண்டும். 26.4.2024 இந்த கல்வியாண்டின் கடைசி வேலை நாளாக இருக்கும். அடுத்த கல்வி ஆண்டில் பள்ளிகள் தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று கல்வித் துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31 ஞாயிறன்று அனைத்து
வங்கிகளும் இயங்கும்: ரிசர்வ் வங்கி உத்தரவு

புதுடில்லி,மார்ச் 22- நிதி ஆண்டின் கடைசி நாளான மார்ச் 31-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை வங்கிகளுக்கு நிதி ஆண்டாக கணக்கிடப்படுகிறது. முதல் நாள் மற்றும் கடைசி நாளில் வங்கிகள் கட்டாயம் வேலை செய்யும். அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி ஆண்டின் கடைசி நாளாகும். அன்று ஞாயிற்றுக்கிழமை வருவதால், வங்கிகள் செயல்படுவதற்கான வாய்ப்பில்லை என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே அரசின் செயல்பாடுகளுக்காகவும், பல்வேறு நிர்வாக காரணங்களுக்காகவும் மார்ச் 31-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளது. வங்கிகளின் அனைத்து கிளைகளும் மார்ச் 31-ஆம் தேதி இயங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி, வங்கி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதேபோல் வருமானவரித்துறை அலுவலகங் களும் மார்ச் 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாள்களில் வருமான வரி செலுத்துவோர், நேரடியாக வருமான வரி அலுவலகங்களுக்கு வந்து சந்தேகங் களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அறிவிக் கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment