வல்லம். மார்ச். 9- பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகத்தில் அன்னை மணியம்மையாரின் 105 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவும், உலக மகளிர் நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. விழாவில் தேனி அரசினர் செவிலியர் கல்லூ ரியின் மேனாள் முதல்வர் வி.கே.ஆர். பெரியார் செல்வி சிறப்புரை நிகழ்த்தினார்.
அவர் தம் உரையில்,
“மகளிர்நாள், உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. சரி சம மான உரிமை, கூலி உயர்வு கோரி அமெரிக்காவில் புரட்சி தோன் றியது. பெண்களுக்கும் வாக்குரிமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதே காலக்கட்டத்தில் 1916 ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் நீதிக்கட்சி தோன்றியது. 1920 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. 1921ஆம் ஆண்டு பெண்களுக்கும் வாக்கு ரிமை வழங்கி சரித்திரச் சாதனை படைத்தது. மகளிர் நாள் கொண் டாடுகிறோம்.
பெண்களுக்கு முழுச் சுதந்திரம் கிடைத்து விட்டதா என்பது கேள் விக்குறியே. ஆண்களுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் பெண்க ளுக்கும் வேண்டும் என்று முழங் கியவர் பெரியார். தமிழ்நாடு ஓர ளவிற்கு முற்போக்குச் சிந்தனை களை கொண்டிருக்கிறது.
2022 -2023 ஆண்டு புள்ளி விவ ரப்படி தமிழ்நாட்டில் உயர்கல்வி பயின்றவர்களின் எண்ணிக்கை 58 விழுக்காடு. அதில் பெண்கள் உயர் கல்வி பெற்றது 47 விழுக்காடு. ஆனால் இந்தியாவில் உயர்கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை 28 விழுக்காடாகவே இருக்கிறது. ‘பெண்களிடம் உள்ள கரண்டியைப் பிடுங்கி விட்டுப் புத்தகங்களை கொடுங்கள்’ என்று சொன்னவர் பெரியார். இன்றைக்கு மகளிர்க்கு சொத்துரிமை வேண்டும் என்று சொல்கிறோம். ஆனால் தந்தை பெரியார் 1929 ஆம் ஆண்டு செங் கல்பட்டில் நடைபெற்ற சுயமரி யாதை இயக்க முதல் மாகாண மாநாட்டில் பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றினார். பெண்களைச் சமமாக நடத்துங் கள். வீட்டிலிருந்தே பெண்ணுரிமை தொடங்கட்டும். தொடருகின்ற பாலியல் சீண்டல்கள் இது அநா கரிகமான சமுதாயம் என்பதை நிரூபிக்கிறது.
மணியம்மையாரின் 105 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பெண் கள் கொண்டாட வேண்டிய திரு விழா . மணியம்மையார் தியாகத் தாய்; தொண்டறத்தாய். சிறு வயது முதல் பெரியாரின் கொள்கைபால் ஈர்க்கப்பட்டவர். மணியம்மையா ரின் வாழ்க்கையை மூன்று பிரிவா கப் பிரிக்கலாம். தந்தை பெரியாரி டம் சேர்ந்து தொண்டராகப் பணி யாற்றியது முதல் கட்டம்.
தந்தை பெரியாரின் துணைவிய ராக இருந்து 25 ஆண்டு காலம் சேவை செய்தது இரண்டாவது கட்டம். தந்தை பெரியாரின் மறைவுக்குப் பிறகு அய்ந்தாண்டு காலம் திராவிடர் கழகத் தலைவ ராக இருந்து இயக்கத்தைக் காத் தது மூன்றாவது கட்டம். மணி யம்மையார் நடத்திய ராவண லீலா போராட்டம் இந்தியாவையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வரலாறு படைத்தது. இந்திரா காந்தி அம்மையார் அவசர கால நிலையைப் பிரகடனப்படுத்தினார். பத்திரிகைச் சுதந்திரம் பறிக் கப்பட்டது . அப்போது அன்னை மணியம்மையார் துணிச்சலுடன் ‘விடுதலை ‘ பத்திரிகையை நடத்தி னார். கலைஞர் அவர்களுக்கு சிலை அமைத்ததும் அன்னை மணியம்மையாரே.
பெரியார் திடலில் ஏழு அடுக்கு மாளிகை எழுப்பி அதற்கு ‘பெரியார் பில்டிங் ‘ என்று பெயர் சூட்டினார். மணியம்மையார் நடத் திய ‘நாகம்மையார் இல்லம்’ ஆதரவற்ற குழந்தைகளின் புகலிடம்.
பல பெண்களின் துயர் துடைத்த இல்லம் அது. அதனுடைய சாத னையைத் தேடிப் போக வேண் டியது இல்லை; நானே அங்கு வளர்ந்த பெண் தான்” என்று பேசினார்.
விழாவிற்குப் பல்கலைக் கழகப் பதிவாளர் சிறீவித்யா தலைமை வகித்தார். அவர் தம் உரையில், “பாலின வேறுபாடு இல் லாமல் எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும்.
பெரியார் இல்லையென்றால் இவ்வளவு பெரிய முன்னேற்றத்தை நாம் கண்டிருக்க முடியாது. அன்னை மணியம்மையார் துணிச்சல் மிக் கவர். திராவிடர் கழகத்தின் தலை மைப் பொறுப்பை ஏற்றுத் திறம் பட இயக்கத்தை வழிநடத்தியவர். மகளிர் நாள் விழாவில் நாம் உணர வேண்டிய செய்தி ஒன்று உள்ளது. ‘பெண்களுக்கு பெண்களே எதிரி’ என்னும் நிலை மாற வேண்டும்.
மாணவர்கள் முன்னேறுவதற் குப் பல்கலைக்கழகம் அனைத்து உதவிகளையும் செய்யும். மாணவர் கள் திறமையை வளர்த்து அந்த திறமையை சமுதாயத்திற்குப் பயன் படுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
விழாவில் மாணவி யாழினி வரவேற்புரை நிகழ்த்தினார். மாணவி ஜனரஞ்ஜனி நன்றி கூறினார். மாணவி யாழிசை நிகழ்ச் சியைத் தொகுத்து வழங்கினார்.
உலக மகளிர் நாள் விழாவில் பெண் சாதனையாளர்களுக்குப் பதிவாளர் பேரா. சிறீவித்யா விரு துகளை வழங்கினார். சிறந்த தொழில்முனைவோருக்கான ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி ‘ விருதினைப் பேராசிரியர் டாக்டர் பர்வீன் அவர்களும், சிறந்த மேனாள் மாணவர்களுக்கான ‘அன்னை மணியம்மையார்’ விருதினைப் பொறியாளர் சாரா அவர்களும், அரசு சாரா அமைப்பு மற்றும் சிறந்த சேவைக்கான ‘தலைமைப் பெண்கள் ‘ விருதினை விஜயலெட் சுமி அவர்களும், விளையாட்டு மற்றும் சிறந்த சேவைக்கான ‘கல் பனா சாவ்லா’ விருதினை மாணவி கண்மணி அவர்களும், சிறந்த சேவைக்கான ‘மேரி கியூரி’ விரு தினை டாக்டர் ஷர்மிளா பேகம் அவர்களும், சிறந்த சேவைக்கான ‘சாவித்ரிபாய் பூலே ‘ விருதினை தொழில்நுட்ப உதவியாளர் இலக் கியா அவர்களும் பெற்றனர்.
மேனாள் மாணவி ந.சாரா நிர்வாக பொறியாளர் நீர்வளத் துறை, குளித்தலை அவர்கள் நல் லுச்சாமி அழகுமணி ஆகியோரின் பெயரில் அறக்கட்டளையை ரூ.1 லட்சத்திற்கான நன்கொடையினை அளித்தார். இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் படிப்பில் முதலிடம் பெரும் பிற்படுத்தப்பட்ட வகுப் பினை சார்ந்த மாணவிக்கு ரூ.10000வழங்கப்படும் என்றார்.
அன்னை மணியம்மையாரின் பிறந்தநாளையொட்டி நடை பெற்ற கவியரங்கில், ‘யாதுமாகி நின்றவர்’ என்ற தலைப்பில் கட்டிடவியல் துறைப் பேராசிரியர் டாக்டர் சி .செந்தமிழ் குமார் அவர்களும், ‘கல்வியைத் தந்ததில்’ என்ற தலைப்பில் மொழிகள் துறை உதவிப் பேராசிரியர் டாக் டர் உமா மகேஸ்வரி அவர்களும், ‘கழகக் கொள்கை காப்பதில்’ என்ற தலைப்பில் இளங்கலை, கல்வியியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவர் வேல்முருகன் அவர் களும், ‘அய்யாவைக் காப்பதில்’ என்ற தலைப்பில், இளங்கலை, இரண்டாம் ஆண்டு மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை மாணவி சி . கண்மணி அவர்களும் கவிதை வாசித்தார்கள்.
அன்னை மணியம்மையாரின் பிறந்த நாளை முன்னிட்டு பல் கலைக் கழக வள்ளுவர் அரங்கில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்திற்கு நடுவராக கணினி அறிவியல் மற்றும் பயன் பாட்டியல் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் ஆ.முத்தமிழ் செல்வன் நடுவராகச் செயல் பட்டார். பெரியாரின் பெரு விருப்பம் ஜாதி ஒழிப்பே! எனும் தலைப்பில் மொழிகள் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் கோ. சுந்தராம்பாள் அவர்களும், நூலக உதவியாளர் பா.யோகப்ரியா அவர்களும், இளங்கலை, நான்காம் ஆண்டு, கல்வியியல் துறை மாணவி சு. முத்துபிரியதர்ஷினி அவர்களும் வாதங்களை முன் வைத்தார்கள்.
பெரியாரின் பெரு விருப்பம் பெண் விடுதலையே! எனும் தலைப் பில், கல்வியியல் துறை உதவிப் பேராசிரியர் அ.இர.ரவித்தா அவர் களும், இளங்கலை, இரண்டாம் ஆண்டு உயிரி தொழில்நுட்பவியல் துறை மாணவர் க. ஹரிஹரன் அவர்களும், இளங்கலை மூன்றாம் ஆண்டு கல்வியியல் துறை மாணவி க. திவ்யா அவர்களும் கருத்துகளை முன் வைத்தார்கள்.
பெரியாரின் பெருவிருப்பம் கல்வி வளர்ச்சியே! எனும் தலைப் பில், ஆலோசகர் இரா .அன்புமதி அவர்களும், முதுகலை முதலாம் ஆண்டு சமூகப் பணித்துறை மாண வர் கார்த்திக் அவர்களும், இளங் கலை, இரண்டாம் ஆண்டு கணினி பயன்பாட்டியல் துறை மாணவி இரா . சத்யா அவர்களும் தகவல் களை எடுத்துரைத்தார்கள்.
பட்டிமன்றம் செவிமடுக்க வருகை புரிந்தோரை இளங்கலை முதலாம் ஆண்டு மின்னணு மற் றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை மாணவி பி .யோகிதா வர வேற்றார்கள். மாணவி கு. அஸ்வினி நன்றி கூறினார்கள்.
மணியம்மையாரின் பிறந்த நாளை முன்னிட்டு முப்பது மாண வர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூ ரிக்கு குருதிக் கொடை வழங்கினார் கள்.
No comments:
Post a Comment