அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் 10.3.2024 அன்று தமிழ்நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதன் விவரம் வருமாறு:
சாமி கைவல்யம் முதியோர் இல்லம்
சாமி கைவல்யம் முதியோர் இல்லத்தில் உள்ள முதி யோர்கள் அனைவரும் அன்னை மணியம்மையார் அவர் களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
தருமபுரி
தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தந்தை பெரியார் சிலைக்கு தலைமை கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் மாலை அணிவித்தார். மாவட்ட தலைவர் கு. சரவணன் தலைமையில் அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் பெ. கோவிந்தராஜ், மாநில ப.க அமைப் பாளர், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா. செல்லதுரை, நகர தலைவர் கரு.பாலன்,நகர இளைஞரணி செய லாளர் அர்ஜுனன், வாசகர் வட்ட செயலாளர் சுதாமணி, மு. மாவட்ட தலைவர் வீ. சிவாஜி, பெ.மாணிக்கம், த.மு.யாழ் திலீபன், சுப்பிரமணி உள்ளிட்ட கழக தோழர்கள் கலந்துகொண்டனர்.
பாப்பிரெட்டிப்பட்டி
அரூர் கழக மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் அன்னை மணியம்மையாரின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப் பட்டது. மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமையில், மாநில கலைத்துறை செயலாளர் மாரி கருணாநிதி மாலை அணிவித்து அன்னை மணியம்மையாரின் ஆளுமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மாவட்ட மாணவர் கழக செயலாளர் சாய்குமார் ,இளைஞரணி செயலாளர் தென்றல்பிரியன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சிவானந்தம், பகுத்தறி வாளர் கழக மாவட்ட செயலாளர் ஜீவிதா, திமுக பொறுப்பாளர் ரத்தினம் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஒன்றிய கழக செயலாளர் நல். ராஜா மற்றும் நகர செயலாளர் மணி .சக்திவேல் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
பழனி
10-3-2024 அன்று காலை 10-00 மணியளவில் பழனி தந்தை பெரியார் சிலை அருகில் “தொண்டறத்தின் அன்னை” மணியம்மையார் அவர்களின் 105ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
இந்நிகழ்விற்க்கு பழனி நகரச் செயலாளர் செந்தில் தலைமையேற்றார். இந்நிகழ்வை பழனி மாவட்ட இளைஞ ரணிச் செயலாளர் ப.பாலன், ஒன்றியச் செயலாளர் சி.இராதா கிருட்டிணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் மா.முருகன், மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார், மாவட்டத் துணைத் தலைவர் வேடசந்தூர் இராமகிருட்டிணன், மாவட்டத் துணைச் செயலாளர் வழக்குரைஞர் ஆனந்தன், ஆதித் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் பழனி ராஜா,பழனி மணி, தமிழ்புலிகள் கட்சி இரணியன், தமிழரசன், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை மாவட்டத் தலைவர் தமிழ் முத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மேலும் மாவட்ட இளைஞரணி தலைவர் சி.கருப்புச்சாமி, பகுத்தறிவாளர் கழகம் இராமசாமி, ஆ.திருச்செல்வம், நெய்க் காரபட்டி பேரூர் கழகத் தலைவர் குட்டி, குண.அறிவழகன், ஒட்டன்சத்திரம் சிவா மற்றும் பொதுமக்கள் என ஏராள மா னோர் பங்கேற்று அன்னை மணியம்மையாரின் போராட் டக்களங்களை நாங்கள் வசிக்கும் பகுதிகளில் எடுத்து சொல் வோம் எனவும் மேலும் தோழமை அமைப்புப் பொறுப் பாளர்கள் “இனி வரும் காலங்களில் அம்மா அவர்களின் உருவப் படத்தை எங்கள் இல்லங்களிலும், எங்கள் கட்சித் துண்டறிக்கைகளிலும் இடம்பெறச் செய்வோம்”என்று நெகிழ்ச்சியுடன் கூறினர்.
இறுதியாக வேடசந்தூர் இராமகிருட்டிணன் நன்றி கூற, விழா இனிதே நிறைவு பெற்றது.
தாராபுரம்
10.3.2024 – அன்று காலை9:30 மணி அளவில் தாராபுரம் பெரியார் திடலில் நடைபெற்ற அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரின் 105- ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தாராபுரம் கழகம் மாவட்டம் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ப.க மாவட்ட தலைவர் தோழர் துங்காவி வெங்கடாசலம் , ப.க மாவட்டத் துணைத் தலைவர் தோழர் முருகேசன் , ப.க மாவட்ட செயலாளர் பு. முருகேசு, ப.க நகர தலைவர் காந்தி (எ) மாரிமு 10.3.2024 – அன்று காலை 9:30 மணி அளவில் தாராபுரம் பெரியார் திடலில் நடைபெற்ற அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையாரின் 105-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தாராபுரம் கழகம் மாவட்டம் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பா.க.மாவட்ட தலைவர் தோழர் துங்காவி வெங்கடாசலம் , ப.க மாவட்டத் துணைத் தலைவர் தோழர் முருகேசன் , பா.க மாவட்ட செயலாளர் பு. முருகேசு, ப.க.நகர தலைவர் காந்தி (எ)மாரி ஆகியோர் பங்கேற்றனர்.
பொத்தனூர்
பொத்தனூரில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டனைத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அன்னை மணியம்மை 105 ஆவது பிறந்தநாளில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கழகப் பொறுப் பாளர்கள்.
திருச்சி
திருச்சி மாவட்ட தலைவர் ஞா. ஆரோக்கியராஜ் தலைமையில் மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஆர்.பேபி.தி மு க மகளிர் அணி பொறுப்பாளரும், அய்.டி. விங் செயலாளர் கூத்தை பார் கோகிலா, கூத்தை பார் ராமதாஸ், தில்லை நகர் பகுதி தலைவர் ராமதாஸ், பெரியார் பிஞ்சு காவியா, பெரியார் பிஞ்சு அகநியா நாச்சியார், மாணவர் கழக திப்பு. பரத். சாரதி.மாவட்ட இளைஞரணி செயலாளர் சு.மகாமணி.மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சு.ராஜ சேகர். காட்டூர் கிளை கழக செயலாளர் சங்கிலி முத்து.மாநகர அமைப்பாளர் சி.கனகராஜ். தில்லைநகர் பகுதி துணை தலைவர் பிரவீன் குமார். பகுத்தறிவாளர் கழக ஆலோசகர் மணியன். பகுத்தறிவாளர் கழக தலைவர் குத்புதீன். திருநாவுக்கரசு ஆகியோர் அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்கள்.
கோவை
அன்னை மணியம்மையார் அவர்களது 105ஆம் பிறந்த நாளை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகத்தில் அன்னை மணியம்மையார் உருவப்படத்துக்கு மாலை அணிந்து சிறப்பு சேர்த்தனர். மாவட்ட செயலாளர்ஆ பிரபாகரன், மாவட்ட துணை செயலாளர் கழக காளிமுத்து, வெள்ளலூர் நகர தலைவர் ஆறுச்சாமி மாவட்ட மாணவர்கள் அமைப்பாளர் கவுதமன் மற்றும் பெரியார் மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆத்தூர்
ஆத்தூர் கழகத்தின் சார்பாக அன்னை மணியம் மையாரின் 105 ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக நடை பெற்றது விழாவில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த விழாவில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனித உரிமைகள் அமைப்பு மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஏராளமாக வருகை தந்து மகிழ்ந்தனர்.
மாவட்ட தலைவர் த.வானவில் தலைமையேற்று விழாவை துவக்கி வைத்தார் நன்றியுரை தோழர் அருண் கூறி விழாவினை நிறைவு செய்தார் .
நாகை புத்தகரம்
தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் அவர்களின் 105ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு புத்தகரம் தந்தை பெரியார் படிப்பகத்தில் நாகை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் தலைமையில், மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ் குப்தா, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி, மாநில சட்டக் கல்லூரி மாணவர் கழக அமைப்பாளர் மு.இளமாறன், மாவட்ட மாணவர் தலைவர் மு.குட்டிமணி, ஒன்றிய இளைஞரணி தலைவர் சண்முகம், ஒன்றிய மாணவர் கழக பொறுப்பாளர் லெ.மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட துணை தலைவர் பொன். செல்வராசு திராவிடத் தாய் அன்னையின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
No comments:
Post a Comment