கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 10.3.2024 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 10, 2024

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 10.3.2024

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

  • ஆட்சிக்கு வந்தவுடன், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், 50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்படும், ராகுல் உறுதி.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மேலிட தலைவர்கள் இடையே அறிவாலயத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாடு, புதுச்சேரி என 10 நாடாளு மன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால், இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு அனைத்தும் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
  • சமையல் எரிவாயு விலையை ரூ.100ஆக குறைத்த மோடி அரசு, ஆட்சிக்கு வந்தால், மீண்டும் விலையை ஏற்றாது என உறுதியளிப்பாரா? ப.சிதம்பரம் கேள்வி.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

  • தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியிலிருந்து விலகினார்.. அருண் கோயலின் பதவிக்காலம் 2027ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில் விலகியுள்ளார். அருண் கோயல் பதவி விலகியதன் மூலம் தேர்தல் ஆணையர் காலி இடங்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
  • பீகாரில் இருந்து வரும் புள்ளிவிவரங்கள் நாட்டின் உண்மையான படத்தின் ஒரு சிறிய பார்வை மட்டுமே, நாட்டின் ஏழை மக்கள் எந்த நிலையில் வாழ்கிறார்கள் என்பது இன்னமும் நாட்டிற்குத் தெரியாது” என்று ராகுல் காந்தி பேச்சு.
    தி இந்து:
  • டில்லியில் ஆம் ஆத்மி அரசு ‘விகாஸ்’ அல்லது வளர்ச்சியின் மாதிரியைப் பின்பற்றுகிறது ஆனால், பாஜக ‘வினாஷ்’ அல்லது அழிவு மாதிரியைப் பின்பற்றுகிறது, எதிர்க்கட்சிகளின் அரசாங்கங்களை கவிழ்த்தது என்று டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு.
    – குடந்தை கருணா

No comments:

Post a Comment