சண்டிகர், பிப்.22- சண்டி கர் மேயர் தேர்தல், திருட்டு மூலம் கட்சி எப்படி வெற்றி பெறுகிறது என்பதை பா.ஜனதா ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண் டும் என அகிலேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அகிலேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் “தேர்தலில் முறைகேடு நடந் ததை அதிகாரி ஒப்புக் கொண்டது, பாஜனதா எவ்வளவு அதிகாரப் பசி யில் உள்ளது என்பதை காட்டுகிறது. சட்டப் பூர்வமாகவும், அரசமைப் பின் படியும் பா.ஜனதா நாட்டு மக்களிடமும், எங் கெல்லாம் அதிகாரத்தில் இருக்கிறதோ, அங்கெல் லாம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
திருட்டு மூலம் கட்சி எப்படி வெற்றி பெறு கிறது என்பதை பா.ஜனதா ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண் டும். நாடும், அவர்களு டைய குழந்தைகளின் எதிர்காலமும் இது போன் றவர்களின் கைகளில் பாது காப்பாக இருக்காது” என் றார்.
முறைகேட்டில் ஈடு பட்ட அதிகாரி மீது நட வடிக்கை எடுக்க வேண் டும் என்று உச்சநீதிமன் றம் வலியுறுத்தியுள் ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி “அரசாங்கத்தின் அழுத்தத்தின் கீழ் குற்றச் செயல்களை செய்யும் அதிகாரிகளும் இந்த நிகழ்விலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண் டும். இது அவர்களின் வாழ்க்கையையும் அவர் களின் குடும்பத்தையும் அழித்துவிடும், ஏனெ னில் இதுபோன்ற குற் றங்கள் தேசத்துரோகத் திற்கு குறைவானவை அல்ல. மேலும் அவர்கள் கடுமையான தண்ட னையை எதிர்கொள்வார் கள்.” என்றார்.
Thursday, February 22, 2024
தேர்தலில் மோசடியாக வெற்றி பெறுவது தான் பிஜேபி வழிமுறை : அகிலேஷ் குற்றச்சாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment