பிஜேபியின் மதச்சார்பின்மை யோக்கியதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 25, 2024

பிஜேபியின் மதச்சார்பின்மை யோக்கியதை

featured image

பிஜேபியின் மதச்சார்பின்மை யோக்கியதை
குடியரசு நாள் விழா மேடையில்
சரஸ்வதி படத்தை வைக்க மறுத்த
ஆசிரியை பணியிடை நீக்கமாம்

கோட்டா, பிப். 25- சரஸ்வதி தேவியை அவமரியாதை செய்ததற்காகவும், மத உணர்வுகளை புண்படுத் தியதற்காகவும் ராஜஸ்தா னின் பாரான் மாவட்டத் தில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடை நீக் கம் செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் உத்தரவிட்டதன் பேரில் ஆசிரியர் ஹேமலதா 23.2.2024 அன்று பணி இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளார். பணியிடை நீக்கம் செய்யப்பட்டி ருந்தாலும் ஆசிரியர் ஹேமலதா பைர்வா பிகா னரில் உள்ள தொடக்கக் கல்வி இயக்குநரகத்திற் குத் தினமும் வந்து தனது வருகையை பதிவு செய்யு மாறும் உத்தரவிடப்பட் டது. ஆசிரியர் ஹேமலதா மத உணர்வுகளை புண் படுத்தியது தொடர்பான ஆரம்ப விசாரணை முடிந்த பிறகு ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட் டது என்று பரான் மாவட்ட கல்வித்துறை அதி காரி ஒருவர் கூறுகிறார்.

இந்த ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி அரசுப் பள்ளியில் குடியரசு தின விழாவின்போது ஹேம லதாவுக்கும் கிராம மக் களுக்கும் இடையே தக ராறு ஏற்பட்டது. விழா மேடையில் காந்தியார் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் ஒளிப் படங்களுடன் சரஸ்வதி தேவியின் படத்தையும் வைக்க வேண்டும் என்று உள்ளூர் கிராம மக்கள் வலியுறுத்திய போதிலும் ஹேமலதா மறுத்துவிட் டார். சரஸ்வதி பள்ளி மற்றும் கல்விக்காக எந்த பங்களிப்பும் செய்ய வில்லை என்று கூறி சரஸ் வதி படத்தை வைக்க முடியாது என்று கூறிவிட்டார். இது தொடர் பாக அதே அரசுப் பள் ளியைச் சேர்ந்த வேறு இரண்டு ஆசிரியர்களும் இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். மற்றொரு பெண் ஆசிரியருக்கு எதி ராக விசாரணை தொடங் கப்பட்டது.

No comments:

Post a Comment