8.2.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
♦ ஒன்றிய அரசைக் கண்டித்து கருநாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நேற்று போராட்டம் நடத்தினர்.
டெக்கான் கிரானிக்கல்,சென்னை
♦ எதிர்க்கட்சித் தலைவர் போல் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார் – மு.க.ஸ்டாலின்.
♦ மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட மக்கள் தயாராக உள்ளனர் – பினராயி விஜயன்.
♦ உள் ஒதுக்கீட்டை நாங்கள் ஆதரிக்கிறோம் என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு சார்பில் மனு தாக்கல்.
♦ ஏப்ரல் மாத இறுதிக்குள் தமிழ்நாட்டின் அனைத்து வணிகக் கடைகளின் பெயர்களும் தமிழில் இருக்க வேண்டும், அரசு உத்தரவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
♦ கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் ஏழைகள், நடுத்தர மக்களின் வருவாய் குறைந்துவிட்டதாக மக்களவையில் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.
♦ இந்தியாவில் ஊதியம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு இடையே உள்ள இடைவெளி, வருமான விநியோகம் மோசமடைவதையும், மக்கள் நலனில் பலவீனமான முன்னேற்றங்களையும் குறிப்பதாக அமித் பிரேம்ஜி பல்கலைக்கழக பொருளாதாரப் பேராசிரியர் அமித் பசோலே குறிப்பிடுகிறார்.
தி இந்து
♦ தாழ்த்தப்பட்ட ஜாதியினரை ஒரே மாதிரியான குழுவாகக் கருத முடியாது என்கிறது உச்ச நீதிமன்றம்.
♦ மாநிலங்கள் பொறுப்பற்ற முறையில் கடன் வாங்கினால், இறையாண்மை மதிப்பே குறைந்து விடும் என்றும், “நாட்டில் உள்ள கூட்டாட்சிக் கட்டமைப்பு முழுவதுமே இடிந்து விழும் என்றும், மாநிலங்களின் கடன் வாங்கும் திறனைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை வற்புறுத்தி ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதம்.
– குடந்தை கருணா
No comments:
Post a Comment