திருச்சி,பிப்.3- பெரியார் நூற் றாண்டு கல்வி வளாகப் பணித் தோழர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி 30.01.2024 அன்று மாலை 5 மணிக்கு பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந் தியல் கல்லூரியின் முதல்வர் முனை வர் இரா.செந்தாமரை தலைமை யில் பேராசிரியர் முனைவர் சு.கற் பகம் குமர சுந்தரி வரவேற்புரை யாற்றினார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந் தினர் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் தமிழாய்வுத் துறை இணை பேராசிரியர் முனைவர் மு.ஜோதிலட்சுமி பணித் தோழர் களுக்கான தன்னம்பிக்கையுரை நிகழ்த்தினார்.
அவர் தமது உரையில் பகுத்தறிவிற்கு வித்திட்ட பெரியார் நிலத் தில் பணித்தோழர்களுக்கு மத்தி யில் உரையாடுவதில் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் பணித்தோழர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சியானது 22 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருவது போற்றுதலுக்குரியது என்றும் உரையாற்றினார்.
மேலும் அறியாமைகளையும் மூடநம்பிக்கைகளையும் களைந்த தந்தை பெரியார் அவர்கள் நாட் டில் நிலவும் தீண்டாமைகளை கண்டு வெகுண்டெழுந்தார்.
மனிதநேயத்தின் உச்சமாக திகழ்ந்த தந்தை பெரியார் அவர்க ளின் பெயரில் செயல்படும் நிறு வனங்களில் பணியாற்றக்கூடிய பணித்தோழர்களால் உருவாகக் கூடிய மாணவர்கள் மற்ற மாண வர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டும்.
நேர்மை, உண்மை, ஈகை குணம் போன்ற ஆகச்சிறந்த பண்புகளை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அர்ப்பணிப் புடன் கூடிய கடின உழைப்பையும், எதற்கும் பின்வாங்காத விடா முயற்சியையும் பணித்தோழர்கள் பின்பற்றுவதுடன் மாணவ சமுதாய மும் கடைப்பிடிக்கும் அளவிற்கு அவர்களை உருவாக்க வேண்டும் என்றும் உரையாற்றினார்.
அலைபேசியில் காலத்தை சீரழிக்கும் மாணவர்களுக்கு புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதோடு பெற்றோர் களுக்கும் வயதில் மூத்தோர் களுக்கும் மரியாதை கொடுக்கும் சிறந்த பண்பை மாணவர்களிடத்தில் கற்றுக்கொடுக்க வேண்டும் என் றும் உரையாற்றினார்.
தமிழர்கள் மனிதநேயத்திலும் கொடைப்பண்பிலும் எவ்விதம் சிறந்து விளங்கினர் என்பதனை வரலாற்று நிகழ்வினைகொண்டு விளக்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு பெரியார் நூற் றாண்டு கல்வி வளாகப் பணித் தோழர்கள் கூட்டமைப்பின் தலை வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி மற்றும் பெரியார் துவக்கப்பள்ளி யின் தலைமையாசிரியர் விஜய லெட்சுமி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
தொடர்ந்து டிசம்பர் மற்றும் ஜனவரி மாதம் பிறந்த பணித் தோழர்களின் பிறந்தநாள் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டா டப்பட்டது.
நிறைவாக பெரியார் மருந்தியல் கல்லூரியின் மருந்தாக்கவியல் துறை பேராசிரியர் எஸ்.பிரிய தர்ஷினி நன்றியுரை யாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
முன்னதாக திராவிடர் கழகத்தின் செயலவைத் தலைவர் சுயமரி யாதைச் சுடரொளி சு.அறிவுக்கரசு அவர்களின் மறைவிற்கு பணித் தோழர்கள் அனைவ ரும் வீர வணக்கம் செலுத்தினர்.
No comments:
Post a Comment