அச்சப்பட்டால் அழிந்து போவோம்
போராடினால் வெற்றி பெறுவோம்!
காங்கிரஸ் தலைவர் கார்கே முழக்கம்
புனே, பிப்.18– எதிர்க்கட்சி தலைவர் களை பா.ஜனதா பயமுறுத்தி வேட்டை யாடுவதாக பிரதமரிடம் நேரில் கூறிய தாக மல்லிகார் ஜூன கார்கே பேசினார்.
மராட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர்க ளில் ஒருவராக இருந்தவர் அசோக் சவான். இவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந் தார். காங்கிரஸ் கட்சி சார்பில் 2 முறை முதலமைச்சர் பதவியை அலங்கரித்த அவரின் முடிவு காங்கிரஸ் கட்சியினரி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் லோனா வாலாவில் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான 2 நாள் மாநில அளவிலான பயிற்சி முகாம் 16.2.2024 அன்று தொடங்கியது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே காணொலி மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பயமுறுத்தி வேட்டை
நாடாளுமன்ற கூட்டத் தொடர் தேநீர் விருந்தின் போது பிரதமர் மோடியிடம் அமைச்சர்கள், மேனாள் அமைச் சர்கள் என எத்தனை பேரை நீங்கள் வேட்டியாடி உங்கள் கட்சியில் சேர்க் கப் போகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சியினர் பா.ஜனதாவில் சேர விரும்பினால் என்ன செய்ய முடியும் என்று என்னிடம் கூறினார். அப்போது நீங்கள்(பா. ஜனதா) எதிர்க்கட்சிகளை பயமுறுத்தி இந்த வேலையை செய்கிறீர் கள் என்று அவரிடம் சொன்னேன். அதற்கு அவர் அரசின் வேலைகளை பார்த்து தங்களுடன் இணைவதாக தெரிவித்தார். கட்சித் தொண்டர்களும். வாக்காளர்களும் சில நபர்களை பெரிய தலைவர்களாக ஆக்கினார்கள். பின்னர் அவர்கள் ஓடிப்போகிறார்கள். இது கோழைத்தனமான செயலே தவிர வேறு எதுவும் இல்லை
வேலையில்லா திண்டாட்டம்
ஆனால் நாம் பயப்பட வேண்டிய தில்லை. பயந்தால் நாம் அழிந்து போவோம். போராடினால் வாழ்வோம். ஒருநாள் வெற்றி நம்முடையதுதான். போராட நீங்கள் அனைவரும் தயாராக உள்ளீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட் டப்பூர்வ உத்தர வாதம் கிடைக்கும் என்று காங்கிர தலைவர் ராகுல் காந்தி கூறி யுள்ளார். இந்த உறுதிமொழியை மக்கள் வரவேற் றுள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி மீண்டும், மீண்டும் பொய் சொல்லி வருகிறார். இதைமீறி அவரை புகழ்ந்துகொண்டு இருந்தால், நாடு பேரழிவை நோக்கி செல்லும் நாட்டில் ஜனநாயகம் இருக்காது. அரசமைப்பு சட்டம் முற்றாக முடிந்துவிடும். -இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment