திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம் – நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூகப் பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து குழந்தை பராமரிப்பு இல்லங்களில் உள்ள 378 குழந்தைகள் இணைந்து வளமான குடும்பம் என்ற தலைப்பில் 30 நிமிடங்களில் ஓவியம் வரைந்தும் குழந்தைகள் உதவி மய்ய எண் 1098 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜீனியஸ் இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையிலும் இந்நிகழ்ச்சி 17.02.24 அன்று பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் நடைப்பெற்றது. மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ராகுல்காந்தி தலைமை தாங்கினார். குழந்தை நலக்குழு தலைவர் மோகன், உறுப்பினர்கள் முனைவர் பிரபு, சியாமளா, நேத்தலிக் டேன், ஆஃப்பாப்பு, பவுலின், சோபியா ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உலக சாதனை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Sunday, February 18, 2024
Home
கழகம்
தமிழ்நாடு
நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் திருச்சி மாவட்ட அனைத்து இல்லக் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி
நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் திருச்சி மாவட்ட அனைத்து இல்லக் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment