வேளாண் துறை வளர்ச்சிக்கான மேம்பாட்டு தொழில் நுட்பத்தில் வாகனங்கள் தயாரிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 5, 2024

வேளாண் துறை வளர்ச்சிக்கான மேம்பாட்டு தொழில் நுட்பத்தில் வாகனங்கள் தயாரிப்பு

சென்னை, பிப்.5- விவசாயிகள் தங்களின் வாழ்வில் வளம் சேர்ப்பதற்கான வழிமுறைகளை சோனாலிகா டிராக்டர்ஸ் நிறுவனம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தனது ஹெவி டூட்டி டிராக்டர்களின் செயல்திறனை புதிய தொழில் நுட்பத்தைத் தொடர்ந்து புகுத்தி அதை மேம்படுத்திக் கொண்டே வருகிறது. இதன் வெளிப்பாடாக எரிபொருள் சிக்கனமான என் ஜினை இந்நிறுவனம் தயாரித்து அளித்து வருகிறது.

அதிக நுட்பமான 5 ஜி ஹைட் ராலிக்ஸ் பன்முக செயல்பாடு வசதி களைக் கொண்டதாக விவ சாயிகள் தங்களுக்குத் தேவையானதைத் தேர்வு செய்யும் வகையிலும், விளைச் சலை பன்மடங்கு அதிகரிக்கும் வகையிலும் உருவாக்கி வருகிறது. இத்துறையில் முதல் முறையாக இந் நிறுவனம் 5 ஆண்டு உத்திரவா தத்தை தனது ஹெவி டூட்டி டிராக் டர்களுக்கு அளித்து வருவதோடு, டிராக்டர்களின் விலையை தனது இணையதளத்தில் வெளியிட்டு வெளிப்படைத் தன்மையை செயல்ப டுத்தி வருகிறது. ஜனவரி 2024இ-ல் இந்நிறுவன டிராக்டர் விற்பனை சந்தை பங்கு 15.6% ஆக அதிகரித்துள் ளது. ஒட்டுமொத்தமாக 9,769 டிராக் டர்கள் விற்பனை செய்யப் பட்டுள்ளன என இண்டர் நேஷனல் டிராக்டர்ஸ் நிறுவன இணை நிர்வாக இயக்குநர் ரமன் மிட்டல் தெரிவித் துள்ளார்.

No comments:

Post a Comment