தஞ்சாவூர், வல்லம், பிப்.8 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் தலைமையில், புதிய துணை வேந்தராக முனைவர் வெ.இராமச்சந்திரன் அவர்கள் இன்று (8-2-2024) பதவி ஏற்றுக்கொண்டார்.
புதிய துணைவேந்தராக பதவியேற்றுள்ள முனைவர் வெ.இராமச்சந்திரன் அவர்கள் பொறியியல் இளநிலை கல்வியை கோயம்புத்தூர் தொழில்நுட்ப கழகத்திலும், பொறி யியல் முதுநிலை மற்றும் முனைவர் பட்டத்தினை அண்ணா பல்கலைக்கழகத்திலும் பெற்றவர் ஆவார். 36 ஆண்டுகளுக்கு மேலாக கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும். திருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தராகவும், மேலும் நாகலாந்து தேசிய தொழில்நுட்ப கழகத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநராகவும் பணி யாற்றியுள்ளார்.
மேனாள் துணைவேந்தர் முனைவர் செ.வேலுசாமி, பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் பி.கே.சிறீவித்யா, முதன்மையர்கள், இயக்குநர்கள் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பதவியேற்பு விழாவினை சிறப்பித்தனர்.
முன்னதாக புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை வேந்தர் வெ.இராமச்சந்திரன் அவர்களுக்குப் பல் கலைக் கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணி வித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
விடைபெறும் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் வேலுச்சாமி அவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து, வாழ்த்துகளைத் தெரிவித்து பிரியா விடை தந்தார்.
No comments:
Post a Comment