கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 10, 2024

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

10.2.2024
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை ஒப்பீடு வெள்ளை அறிக்கை மோடி அரசின் பொய்கள் அடங்கிய வெள்ளை அறிக்கை என காங்கிரஸ் கடுமையாக தாக்கி உள்ளது.
* அரசுத்துறைகளில் ஆங்கிலம் மற்றும் மாநில மொழிகளை நீக்கி விட்டு, ஹிந்தியை திணிக்கிறது மோடி அரசு. இது கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது என்று டிஎம்சி எம்.பி. சாகேத் கோகலே மாநிலங்களவையில் பேச்சு.
* நிர்மலா சீதாராமனின் அரசியல், சர்ச்சைக்குரிய ஆவணத்தால் பொருளாதார தோல்விகளை மறைக்க முடியாது என காங்கிரஸ் வல்லுநர்கள் குழு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தாக்கு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நான்கு ஆண்டுகளே பணியாற்றும் ஒரு அக்னிவீரர் பணியில் இறந்தால், பிறகு குடும்ப உறுப்பினர்கள்/அடுத்த உறவினர்களின் அவலநிலையைக் கருத்தில் கொண்டு, வழக்கமான ராணுவ வீரரின் குடும்பத்திற்கு வழங்கப்படும் அதே பலன்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு அறிக்கை.
தி டெலிகிராப்:
* நரேந்திர மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்த போது தன்னை ஓபிசி என்று ஒருபோதும் கூறிக்கொள்ள வில்லை என்றும், பிரதமராக வேண்டும் என்று கனவு கண்டபோது தான் ‘ஓபிசி’ கதையைத் தொடங்கினார் என்றும் காங்கிரஸ் சாடல்.
* மக்களவையில் துணைத் தலைவர் இல்லாதது, சபையின் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான அமர்வுகள், அவசரச் சட்டங்களை அதிகமாகச் சார்ந்திருப்பது, போதிய விவாதம் இன்றி மசோதாக்களை நிறைவேற்றுவது ஆகிய நாடாளுமன்ற விதிமுறைகளை மீறியதாக மோடி அரசு மீது சிவில் சமூகம் குற்றப்பத்திரிகையை வெளியிட்டது
* வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, தவிர, விவசாயிகள் சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாயக் கடன் தள்ளுபடி, போலீஸ் வழக்குகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு “நீதி” கேட்டு விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதைத் தடுக்க உ.பி., அரியானா எல்லைகளை காவல்துறை தடுத்துள்ளது.
* அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் சரிந்து 83.03 ஆக உள்ளது
– குடந்தை கருணா

No comments:

Post a Comment