பெண்கள் திறன் மேம்பாடு, வேலை வாய்ப்பு, அரசியலில் பங்களிப்பு இவற்றை ஊக்கப்படுத்த தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 22, 2024

பெண்கள் திறன் மேம்பாடு, வேலை வாய்ப்பு, அரசியலில் பங்களிப்பு இவற்றை ஊக்கப்படுத்த தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்

featured image

சென்னை, பிப் .22 தமிழ்நாட்டில் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, அரசியலில் பெண்களின் நிலையை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப் பட்டுள்ள தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்குப் பார்வையுடன், சமூக நீதி,சமத்துவம், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் போன்றவற் றின் அடிப்படையில் மாநில மகளிர் கொள்கை-2024 உருவாக்கப்பட்டுள் ளது. சமூக நலன், மகளிர்உரிமை துறையால் தயாரிக்கப்பட்ட தமிழ் நாடு மாநில மகளிர் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (21.2.2024) வெளியிட்டார். துறை அமைச்சர் கீதாஜீவன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, துறை செயலர் ஜெயசிறீ முரளிதரன், துறை ஆணை யர் வே.அமுதவல்லி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பாலின உணர்திறன் கொண்ட கல்விமுறையை நிறுவுதல், பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், வளர்இளம் பெண்கள், மகளிரின் ஆரோக்கியம், ஊட்டச்சத்து நிலையை மேம்படுத் துதல், வேலைவாய்ப்பில் மகளிர் பங்களிப்பைஅதிகரித்தல், பெண் பணியாளர்களுக்கு பாதுகாப்பான, உகந்த பணியிடங்களை உறுதி செய்தல், பெண்கள் நிர்வகிக்கும்சிறு தொழில்கள், புதிய தொழில் முயற்சி களுக்கு ஆதரவு அளித்தல், அதிக ஊதியம் பெறும் வேலைவாய்ப்பு களை பெற டிஜிட்டல் கல்வி அறிவை ஊக்குவித்து, டிஜிட்டல் பாலின இடைவெளியை குறைத்தல், பயிற்சி, திறன் மேம்பாடு மூலம் திறன் இடைவெளியை குறைத்தல், மகளிருக்கு வங்கிக் கடன் உதவி அதிகம் கிடைக்க வழிவகை செய்தல், மகளிரை அரசியல் களத்தில் பங் கேற்க ஊக்கப்படுத்துதல் ஆகியவை மாநில மகளிர் கொள்கையின் முக்கிய அம்சங்கள் ஆகும்.

சமூகநலத் துறை ஒருங்கிணைப்பு துறையாக இருந்து இக்கொள்கை யின் செயல்பாட்டை கண்காணிக் கும். இதற்காக, சமூகநலத் துறை இயக்குநரக அலுவலகத்தில் ‘செயல் படுத்தல், கண்காணிப்பு அலகு’ அமைக்கப்படும்.
தலைமைச் செயலர் தலைமையில் உயர்நிலை பெண்கள் உரிமைக் குழு, சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து 6 மாதங்களுக்கு ஒரு முறை கூடி, கொள்கை செயல்பாடு குறித்து ஆய்வு செய்து, இடைக்கால திருத்தங்களை பரிந்துரைக்கும். இதேபோல, ஆட்சியர்கள் தலைமை யில், மாவட்ட அளவிலான கண் காணிப்பு குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை இதன் செயலாக்கத்தை கண்காணித்து, எதிர்கொள்ளும் சவால்களை சரிசெய்யும்.
சமூகம், பொருளாதாரம், அர சியலில் அதிகார பகிர்வு பற்றி எடுத்துரைப்பதுடன், கல்வி, வேலை வாய்ப்பு, திறன் வளர்ப்பு ஆகியவற் றில் பெண்களின் நிலையை இக் கொள்கை மேம்படுத்தும். பெண்கள் சுயமரியாதையுடன் வாழவும், அவர்களுக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான, லட்சியம்நிறைந்த சூழலை உருவாக்கவும் இது ஏதுவாக இருக்கும். நாட்டில் மகளிர் மேம்பாட்டுக்காக தனியான ஒரு கொள்கையை ஒருசிலமாநிலங்களே இதுவரை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment