திண்டுக்கல், பிப். 7- திண்டுக் , வடமதுரை ஒன்றி யம், சு.அறிவுக்கரசு திட லில் 3.2.2024 அன்று மாலை 5.00 மணியளவில் மதுரை பேராசிரியர் பெரியார் பித்தனின் மந்திரமா? தந்திரமா? விழிப்புணர்வு நிகழ்சி திண்டுக்கல் மாவட்ட தலைவர் மு. ஆனந்த முனிராசன் தலைமையிலும், தலை மைக்கழக அமைப்பாளர் இரா.வீரபாண்டியன் மற்றும் பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலா ளர் செல்வம் ஆகியோ ரின் முன்னிலையிலும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர். கே.ஆர்.காஞ்சித்துரை வர வேற்புரை ஆற்றினார். தொடக்க உரையாக வடமதுரை தோழர்கள் வெள்ளைச்சாமியும், பிளாக்பட்டி.செந்தில் குமாரும், திமுக பேரூர் கழக செயலாளர் கணேச னும், சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் மந்திரமா? தந்திரமா? புகழ் பேராசிரியர்.சுப.பெரியார் பித்தன் கண் ணைக் கட்டிக்கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டியதைக் கண்டு வட மதுரைவாழ் பொதுமக்க ளும் வியாபாரிகளும் ஆச்சரியமுற்றனர். பின்னர் பெரும்திரளாக கலந்துகொண்ட பொது மக்களிடையே தேங்காய் குள் பூவினை வரவழைத் தல், சிறுவன் வயிற்றுக்குள் இருந்து தொக்கம் எடுத்தல், மண்ணிலிருந்து விபூதி வரவழைத்தல், கயிறை கழுத்தில் இறுக்கி கயிறை துண்டாக்குதல், பாலினை குடித்துவிட்டு மீண்டும் டம்ளரில் நிரப்பி ஆச்சரியமூட்டினார். இந்த மந்திரமா? தந்தி ரமா? நிகழ்ச்சியினை பெண்கள், குழந்தைகள், பொதுமக்கள் என அதி களவில் பார்த்து ஆச்சரிய முற்றனர்.
இந்த கூட்டத்தில் கழக தோழர்கள். மாணிக் கம், ஜி.எச்.பாண்டி, திலீ பன், வல்லரசு, சதாசிவம், ரெங்கசாமி, கிருட்டிண கிரி சரவணன், உள்ளிட் டோரும் தேசிய காங் கிரஸ் கட்சியைச் சார்ந்த ராஜரத்தினம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த தோழர் செல்வ ராஜ், தமிழ்புலிகள் கட் சியைச் சார்ந்த ஒன்றிய செயலாளர்கள் பிரகாஷ், சரவணன், திருவள்ளுவர் பேரவை நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பகுத்தறிவாளர் கழகத் தோழர் மகேஷ் ராஜா நன்றியுரை ஆற்றினார்.
No comments:
Post a Comment