தலைமை நீதிபதியின் பார்வைக்குச் செல்லாமலேயே தி.மு.க. அமைச்சர்கள் வழக்கை கையிலெடுத்த நீதிபதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 5, 2024

தலைமை நீதிபதியின் பார்வைக்குச் செல்லாமலேயே தி.மு.க. அமைச்சர்கள் வழக்கை கையிலெடுத்த நீதிபதி

புதுடில்லி, பிப். 5- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி தாமாக முன்வந்து விசாரித்து வருகிறார்.
இதற்கு தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்ற பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அனு மதி அளிப்பதற்கு முன்பே தனி நீதிபதி வழக்கு விசாரணை தொடங்கி உள்ளதாக பரபரப்பான தகவல் இடம்பெற்றுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் வருவாய் மற் றும் பேரிடர் மீட்புத்துறை அமைச் சராக இருப்பவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன். இவர் மேனாள் முதலமைச்சர் கலைஞர் அமைச்சரவையிலும் இடம் பெற்றி ருந்தார். 2006-2011இல் தமிழ்நாட் டில் தி.மு.க. ஆட்சி நடந்தபோது கலைஞர் அமைச்சரவையில் அவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.

இந்த காலக்கட்டத்தில் கேகே எஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தனது வருமானத்தை மீறி ரூ.44.59 லட்சம் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து 2011இல் அதிமுக ஆட்சிக்காலத்தில் கேகே எஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் விருதுநகர் மாவட்டம் சிறீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் இருவரையும் விடுவித்து உத்தர விட் டது. போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி மனைவியுடன் கேகேஎஸ் எஸ்ஆர் ராமச்சந்திரன் விடுதலை யானார். இதையடுத்து லஞ்ச ஒழிப் புத்துறை மேல்முறையீடு செய்ய வில்லை.

இதையடுத்து அந்த வழக்கை தாமாக முன்வந்து மறுஆய்வுக்கு எடுத்து உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் விசாரிக்க தொடங்கினார். மேனாள் மற்றும் இந்நாள் அமைச்சர்களின் வழக்கு களை இவர் தாமாக முன்வந்து விசாரித்து வரும் நிலையில் கேகே எஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வழக் கையும் கையில் எடுத்தார்.
தற்போதைய அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, அய்.பெரியசாமி, மேனாள் முதலமைச் சர் ஓ.பன்னீர்செல்வம், மேனாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோரின் வழக்குகளை போல் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் வழக்கையும் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் விசாரிக்க தொடங்கினர்.

இந்நிலையில் தான் சொத்துக் குவிப்பு வழக்கு மறுஆய்வை எதிர்த்து அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்யப்பட் டது. அதில் கீழ் நீதிமன்றத்தில் முடிந்த வழக்கை யாரும் மேல்முறை யீடு செய்யவில்லை. இதனால் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ரிஷிகேஷ் ராய் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அமைச்சர் தரப்பில் வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி இருந்தார். அவர் வாதம் வைக்கும்போது “முடித்து வைக்கப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க தனி நீதிபதிக்கு அதிகாரம் இல்லை. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதல் இல் லாமல் இதுபோன்ற உத்தரவை நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் பிறப்பித்துள்ளார்.
ஆகவே, வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்ற வாதம் முன்வைக் கப்பட்டது.

இதையடுத்து கேகேஎஸ்எஸ் ஆர் ராமச்சந்திரன் வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டதா என்பது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்ற பதிவாளர் வரும் பிப்ரவரி 5ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தர விட்டார்.
இந்நிலையில் தான் உச்சநீதிமன் றத்தில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் எம் ஜோதி ராமன் அறிக்கை தாக்கல் செய் துள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தற்போதைய அமைச்சர்கள், மேனாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை தாமாக முன் வந்து விசாரிப்பதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால் அதை அவர் பார்ப் பதற்கு முன்பாகவே தானாக முன் வந்து தனி நீதிபதி வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி விட்டார்” என தெரிவிக்கப்பட் டுள்ளது.
தற்போது சென்னை உயர்நீதி மன்ற பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வரும் 5ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment