புதுச்சேரியில் "தணியாது எரியும் காடு" நூல் அறிமுக விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 19, 2024

புதுச்சேரியில் "தணியாது எரியும் காடு" நூல் அறிமுக விழா

featured image

புதுச்சேரி, பிப்.19– பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் வி.இளவரசி சங்கர் எழுதிய “தணியாது எரியும் காடு” என்ற புத்தக அறிமுக விழா 17-02-2024 அன்று மாலை புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.
பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெ.நடராசன் தலைமையில் செய லாளர் பா.குமரன் வரவேற்புரை ஆற்றினார்.
திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வே.அன்பரசன் முன்னி லையில் ஊடகவியலாளர் பி.என்.எஸ்.பாண்டியன் புத்தகத்தைத் திறனாய்வு செய்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் துணைப் பொதுச் செயலாளர் சு.பாவாணன், புதுவை அரசு, வேளாண்மை துறை உதவி இயக் குநரும் எழுத்தாளருமான புது வைப் பிரபா ஆகியோர் புத்தகத்தை அறிமுகம் செய்து வைத்து வாழ்த் துரை வழங்கினர்.
நிறைவாக நூலாசிரியர் வி.இள வரசி சங்கர் ஏற்புரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் எதிரொலி பறையாட்டக் குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
“தணியாது எரியும் காடு” புத்தகத்தை பின்வரும் தோழர்கள் ஒருவர் பின் ஒருவராகப் பெற்றுக் கொண்டனர்.
திராவிடர் கழகக் காப்பாளர் இர.இராசு, மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர்
பறை இசைக் கலைஞர்கள் பிரசாந்த், பசுபதி, திருமாறன், கவிராஜ், பிரியா, திவ்யா ஆகிய தோழர்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்து சிறப்பு செய்யப் பட்டது.
நிகழ்ச்சியை ஜெ.வாசுகி தொகுத்து வழங்கினார்.
நிறைவாக விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஆ.சிவராசன் நன்றி கூறினார்.
பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து நடத்திய நிகழ்ச்சியை அறிவுவழி ஊடகவியலாளர் அரும்பாக்கம் பொ. தாமோதரன் நேரலையில் ஒளிபரப்பு செய்தார்.

No comments:

Post a Comment