மலப்புரம்,பிப்.19- இந்தியாவை ஹிந்து நாடாக மாற்றும் முயற்சிக்கு எதிராக ஜனநாயக – மதச்சார்பற்ற சிந்தனையாளர்கள் ஒன்றுபட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி அழைப்பு விடுத்தார்.
மலப்புரம் மாவட்டம் கரிப் பூரில் முஜாஹித் மாநில மாநாட் டில், ‘ஊடக செயல்பாடுகள் சிவில் உரிமைகள் மற்றும் விழிப் புணர்வு’ கருத்தரங்கில் ‘இந் தியாவில் மதச்சார்பின்மையின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் காணொலி வாயிலாக யெச்சூரி உரையாற்றினார்.
அப்போது, “வரவிருக்கும் முக் கியமான பொதுத் தேர்தலுக்கு மதச்சார்பற்ற இந்தியா ஒன்றுபட வேண்டும். இந்தியாவில் ஜன நாயகமும், மதச்சார்பின்மையும் கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன. அரச மைப்புச் சட்டத்தின் தூண்கள் கூட அச்சுறுத்தலுக்கு உள்ளாகி யுள்ளன. கேரள மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இந்தப் போராட்டத்தில் கேரள மக்கள் நிறைய செய்ய முடியும். ஜாதி, மத பேதம் இல்லாத ஒரே இடம் இதுதான்” என்று யெச்சூரி கூறினார்.
கருத்தரங்கின் நிறைவுக் கூட்டத்தை நேற்று (18.2.2024) மாலை 4 மணிக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார்.
No comments:
Post a Comment