பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) விளையாட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 18, 2024

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) விளையாட்டு விழா

featured image

வல்லம். பிப். 18- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் விளையாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. விளையாட்டு விழா நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் விளையாட்டு விழா துறைத்தலைவர் டி.ரமேஷ் அனைவரையும் வரவேற்றார்.

பல்கலைக்கழக துணைவேந் தர் முனைவர் வெ.இராமச்சந் திரன் தலைமையுரையாற் றினார். அவர் தமது உரையில்: விளையாட்டில் மாணவர் கள் சிறப்புமிக்க ஈடுபாடு இருக்க வேண்டும் என்றும் மேலும் ஒரு மாணவன் விளையாட்டில் சிறந்து விளங்கினால் அவன் எப்படிபட்ட சூழ்நிலையிலும் வெற்றிபெறுவான் என்றும் கூறினார். மாணவர்கள் விளை யாட்டின் மூலம் தங்களது ஆற் றலை செலவு செய்து இழந்து தங்களது உடம்பிற்கு ஆற்றலை யும் ஆரோக்கியத்தையும் பெறு கிறார்கள் எனக்கூறினார்.

பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியை பி.கே.சிறீவித்யா சிறைப்புரையாற்றும் போது மாணவர்களை வெகுவாக பாராட்டியதோடு மட்டுமல்லா மல் விளையாட்டு வீரார்கள் வீராங்கனைகளுக்கு நமது பல் கலைக்கழகத்தில் வழங்கப்படும் கல்வி ஊக்கத்தொகை பற்றி விளக்கி கூறினார்.

பல்கலைக்கழக விளையாட்டு விழா தொடக்கவுரையினை பி.சுப்ரமணியன், ஒலிம்பியன் விளையாட்டு வீரர், வீராங் கனைகளை பாராட்டி அவர்கள் தேசிய அளவில், இந்திய அள வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை மாணவர்களி டையே எடுத்துரைத்தார். விளை யாட்டு வீரர்கள் ஒழுக்கத்துட னும், மதிப்புமிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று மாண வர்களுக்கு அறிவுரை வழங் கினார். பரிசளிப்பு விழாவில் துணைவேந்தர், பதிவாளர், அனைத்து முதன்மையர்கள், இயக்குநர்கள், துறைத்தலை வர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். விளை யாட்டில் வெற்றிபெற்ற மாண வர்கள் மற்றும் பேராசிரியர்க ளுக்கும் பரிசுகளை வழங்கினர்.
சிறப்பு விருந்தினர் உதவி காவல் கண்காணிப்பாளர் திருமதி ஷஹ்னாஸ் இல்யாஸ் அய்.பி.எஸ், உரையாற்றும் போது: மாணவர்களாகிய நீங்கள் மாநில அளவிலும், தேசிய அளவிலும், உலக அளவிலும் விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

மேலும் பல்கலைக்கழகப் விளையாட்டுப் போட்டியில் அன்னை கண்ணம்மாள் (மஞ்சள்) அணி வெற்றி பெற்றது. இப்போட்டியினை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் உடற்கல்வி துறை இயக்குனர் டி ரமேஷ் ஏற்பாட்டினை சிறப் பாக செய்திருந்தார்.

No comments:

Post a Comment