புதுடில்லி, பிப்.18 டில்லி சட்டப் பேரவையில் மொத்தம் 70 சட்ட மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆளும் ஆம் ஆத்மிக்கு 62, பாஜக வுக்கு 8 சட்டமன்ற உறுப்பினர்க்கள் உள்ளனர். ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க ஒன்றியத்தில் ஆளும் பாஜக முயற்சி செய்கிறது என்று முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் அண்மையில் குற்றம் சாட்டினார்.
இந்த சூழலில் டில்லி சட்டப் பேரவையில் நேற்று முன்தினம் (16.2.2024) நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கேஜ்ரிவால் தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதம் நேற்று (17.2.2024) நடைபெற்றது.
அப்போது முதலமைச்சர் கெஜ்ரிவால் பேசியதாவது: டில்லி அர சின் ஆட்சி நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுகிறது. எனது உத வியாளரைகூட என்னால்மாற்ற முடியாது. அரசு அலுவலர்களின் செயல்பாடுகளை ஒன்றியஅரசு தடுக்கிறது. மக்கள் நலத்திட் டங்களை செயல்படுத்தவிடாமல் பாஜக இடையூறு செய்து வருகிறது. அதையும் மீறி மக்கள் பணிகளை செய்து வருகிறோம். பாஜகவை எதிர்க்கும் வலிமை கொண்ட கட்சியாக ஆம் ஆத்மி உருவெ டுத்துள்ளது. இதன்காரணமாக எங்கள் கட்சியை அழிக்கபாஜக தீவிர முயற்சி செய்கிறது. டில்லி ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க எங் களது சட்டமன்ற உறுப்பினர் களுக்கு பாஜக விலை பேசியது.
இவ்வாறு அர்விந்த கெஜ்ரிவால் பேசினார்.
குரல் வாக்கெடுப்பு: இறுதியில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. இதன்மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.
8 சட்டமன்ற உறுப்பினர்கள் வரவில்லை: ஆம் ஆத்மியின் 3 சட் டமன்ற உறுப்பினர்க்கள் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். 2 பேர் சிறையில் உள்ளனர். 2 பேரின் வீடுகளில் திருமண விழா நடை பெறுகிறது. ஒரு சட்டமன்ற உறுப் பினர் வெளிநாட்டில் உள்ளார். எனவே இந்த எட்டு பேரும் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க வில்லை. இதன்காரணமாக ஆம் ஆத்மியின் 62 சட்டமன்ற உறுப் பினர்களில் 54 பேர் மட்டுமே நேற்று சட்டப்பேரவையில் இருந் தனர். துணைநிலை ஆளுநர் உரை யின் போது இடையூறு செய்த தற்காக பாஜகவின் 7 சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத் தொடர் முழுவதும் 16.2.2024 அன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment