சிதம்பரம், பிப்.17 கோவை சதாப்தி விரைவு மற்றும் மைசூர் விரைவு ரயிலை கடலூர் வரையிலும் நீட்டிக்கக் கோரி, சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பி னர் எழுச்சித் தமிழர் தொல்.திருமா வளவன் தலைமையில் 14.2.2024 அன்று சிதம்பரம் ரயில் நிலையில் ரயில் மறி யல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
சார் ஆட்சியர் தலைமையில் நடை பெற்ற அமைதிக் கூட்டத்தில் தென் மண்டல ரயில்வே தலைமை அதி காரியிடம் நேற்று (16.2.2024) திருச்சியில் எழுச்சித் தமிழர் திருமாவளவனும், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாரும், சிதம்பரம் தொகுதி ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் வர்த்தக சங்கம், பல்வேறு இயக்கத் தோழர்கள் ரயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.
அதை உடனடியாக பரிசீலனை செய்வதாகவும், விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் விசிக மாவட்ட செயலாளர் அரங்க தமிழ்ஒலி..சி.பி.எம். லால்புரம் தலைவர் வி.எம்.சேகர், தா.வ.க. மாவட்ட செயலாளர் சேரலாதன், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் அன்பு.சித்தார்த்தன், சிபிஎம் சிதம்பரம் நகராட்சி துணைத் தலைவர் முத்து, வி.சி.க. நகர செயலாளர் ஆதிமூலம் மற்றும் காட்டுமன்னை, பரங்கிப்பேட் டைத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து- ரயில்வே அதி காரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்த தால், போராட்டம் கைவிடப்பட்டது.
Saturday, February 17, 2024
Home
தமிழ்நாடு
சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தொல்.திருமாவளவன் எம்.பி., தலைமையிலான போராட்டக் குழுவினருடன் ரயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை
சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தொல்.திருமாவளவன் எம்.பி., தலைமையிலான போராட்டக் குழுவினருடன் ரயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment