சென்னை, பிப்.22 போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15
ஆ-வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தைக் குழுவின் பரிந்துரை களை ஆய்வு செய்ய துணைக்குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
போக்குவரத்துக் கழக தொழி லாளர்களுக்கான 14-ஆவது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆக.31-ஆம் தேதியுடன் காலா வதியானது. இதனால் 15ஆ-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த் தையை விரைந்து தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளைத் தொழிற்சங்கங்கள் முன்னெ டுத்தன.
இந்நிலையில், 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் நிர்வாகம் தரப்பில் பங்கேற்க நிதித்துறைச் செயலர், 8 போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், போக் குவரத்துத் துறை தலைவர் அலு வலக தனி அலுவலர் உள்ளிட்ட 14 பேர் கொண்ட குழுவை அமைத்து கடந்த 6-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட் டது.
இந்த பேச்சுவார்த்தைக் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்யும் வகையில் துணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்கு வரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டிபிறப்பித்த அர சாணையில், “15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக் குழுவின் பரிந்துரையை ஆய்வு செய்ய நிதித்துறைச் செயலர், சென்னை மாநகரம், விரைவு, சேலம் போக்குவரத்துக் கழ கங்களின் மேலாண் இயக்கு நர்கள், மாநகர போக்குவரத்துக் கழக தலைமை நிதி அலுவலர் ஆகிய 5 பேர் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
Thursday, February 22, 2024
Home
தமிழ்நாடு
போக்குவரத்து தொழிலாளர் ஊதிய ஒப்பந்தம் பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தக் குழுவின் பரிந்துரை ஆய்வு செய்ய துணைக் குழு அரசாணை வெளியீடு
போக்குவரத்து தொழிலாளர் ஊதிய ஒப்பந்தம் பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தக் குழுவின் பரிந்துரை ஆய்வு செய்ய துணைக் குழு அரசாணை வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment