நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சமா?
ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து டில்லியில் கேரள முதலமைச்சர் போராட்டம்!
‘இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு!
புதுடில்லி, பிப். 9- மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, டில்லியில் கேரள முதலமைச்சர் பின ராயி விஜயன் நடத்திய மாபெரும் போராட்டத்தில் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
ஒன்றிய இடைக்கால நிதி நிலை அறிக்கையில் தென் மாநிலங்கள் புறக் கணிக்கப்படுவதாக கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. வரிப் பகிர்வு விவ காரத்தில் தென்மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அநீதி இழைப்பதாக தமிழ் நாடு, கருநாடகம், கேரளா ஆகிய மாநிலங்கள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில், ஒன்றிய அரசுக்கு எதிராக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அம்மாநில அமைச் சர்கள் டில்லியில் போராட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
ஜம்மு – காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், காஷ்மீர் மேனாள் முதலமைச்சருமான ஃபரூக் அப் துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச் சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தி.மு.க. சார்பில் தி.மு.க. மாநிலங் களவை குழு தலைவர் திருச்சி சிவா, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற் றனர்.
டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்டோரும் கேரள அமைச்சரவை போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இந்தியாவின் கூட்டாட்சி கட்ட மைப்பை பாதுகாக்க ஒன்றிணைந்துள் ளதாக கூறியுள்ளார். அனைத்து மாநி லங்களையும் சமமாக நடத்துவதை உறுதி செய்வதை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒன்றிய அரசுக்கு எதிராக வலுவான எதிர்ப்பை தெரிவிக்க ஒன்றிணைந்துள்ளோம்
இந்தியாவின் கூட்டாட்சி கட்ட மைப்பை பாதுகாக்க நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம். அனைத்து மாநிலங் களும் சமமாகநடத்தப்படுவதை உறுதி செய்யும் விடியலை நோக்கிய பயணம் தொடங்கி உள்ளது. ஒன்றிய, மாநில உறவில் சமநிலையை பாதுகாக்கவும் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்திய வரலாற்றில் இந்த நாள் ஒரு முக்கியமான நாளாக பதிவு செய்யப் படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment