உ.பி.யில் ஹிந்துத்துவ வன்முறைகளை எதிர்த்து முஸ்லிம்கள் போராட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 11, 2024

உ.பி.யில் ஹிந்துத்துவ வன்முறைகளை எதிர்த்து முஸ்லிம்கள் போராட்டம்

பரேலி, பிப்.11 உத்தரகண்டின் ஹல்த்வானி வன்முறை, ஞானவாபி மசூதி பிரச்சினை உள்பட முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் சிறை நிரப்பும் போராட்டத்துக்கு ‘இத்தேஹாத்- இ-மில்லத்’ என்ற இஸ்லாமிய அமைப் பின் தலைவர் தவுகீர் ராசா கான் கடந்த 8-ஆம் தேதி அழைப்பு விடுத்திருந்தார். இந்த போராட்டத்துக்கு மாவட்ட நிர்வா கம் சட்டம் – ஒழுங்கை காரணம் காட்டி அனு மதி அளிக்க மறுத்த நிலையில், அரசு தடை உத்தரவை மீறி தவுகீர் ராசா கான் போராட்டம் நடத்துவோம் என அறிவித்திருந்தார்.
போராட்டத்தை ஒடுக்க, தவுகீர் ராசாகான் போராட் டம் நடத்த முடிவு செய்திருந்த இஸ்லாமிய கல்லூரி மைதானத் துக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் மூடி முத்திரை வைத்த பாஜக அரசு, தவுகீர் ராசா கானை தடுப்பு காவலில் வைத்தது. இதனை கண்டித்து தவுகீர் ராசா கானின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பரேலி வீதிகளில் குவிந்து போராட்டம் நடத்தினர்.

ஹிந்துத்துவா குண்டர்களால் வன்முறை

தவுகீர் ராசா கானின் ஆதரவாளர்களும், பொதுமக்க ளும் போராட்டம் முடிந்து அவரவர் வீட்டிற்கு செல்லும் போது, அவர்கள் மீது பாஜக, ஆர்எஸ்எஸ், விஎச்பி ஹிந் துத்துவா குண்டர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி யுள்ளனர். இந்த தாக்குதலில் 2 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, பரேலி பகுதியில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
“ஆளும் பாஜக அரசு முஸ்லிம்களை எதிரிகளாக ஆக்குகிறது. அரசாங்கத்தின் முஸ்லிம் எதிர்ப்புக் கொள்கைகளை நாங்கள் எதிர்க்கிறோம்” என சன்னி இஸ்லாம் பரேல்வி பிரிவின் நிறுவனர் அகமது ராசா கான் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment