எதையும் முயன்று பார்க்கக்கூடிய துணிவைக் கொண்டவனாக உங்கள் முன்னால் நிற்கிறேன். இது பெரியார் – அண்ணா வழியாக எனக்குள் விதைத்திருக்கக் கூடிய விதை. இன்று நம்மிடத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் இல்லை என்றாலும் தலைவரின் கொள்கை தீபம் நம்மிடத்தில் இருக்கிறது. நம்முடைய உயிரும், உயிர் மூச்சும் இருக்கின்ற வரை தொடர்ந்து அது இருந்துகொண்டே இருக்கும்.
இன்றைக்கு நிலவும் அரசியல் சமூக சூழ்நிலைகள் சுய மரியாதை கொள்கைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து பெரும் சவாலாக நிலவுகின்றன. கல்வி, கலை, இலக்கியம், மதம் ஆகியவற்றின் அடிப்படைகளையெல்லாம் அதிகார பலத்தால் மத வெறியால் அழித்திட ஒன்றிய அரசு முயன்று வருகிறது. நீதித்துறை, கல்வித்துறை மாநிலங்களில் ஆளுநர்களை தேர்ந்தெடுக்கும் முறைகள் அனைத்தும் மக்களாட்சியின் மதச்சார்பற்ற கொள்கைகளின் மாண்பை குலைக்கும் செயல்களாகவே அமைந்து கொண்டிருக்கின்றன.
காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும். இன்று நீங்கள் பார்க்கும், கேட்கும் மு.க.ஸ்டாலின் ஆகிய நான். “புதிதாய் பிறக்கிறேன்.”
தன் ஜாதியே உயர்ந்தது என்று நினைப்போர் அல்ல. உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரையும் தன் உடன் பிறப்பாக நினைப்போர். எளியோருக்கு கரம் கொடுப்போர்.
வா! இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்ட வா!
உலகமே வியக்கும் சமூகநீதிக் கொள்கைகளின் தாய் வீடாம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம். தந்தை பெரியார் அவர்கள் நமக்கு கற்றுத்தந்த சுயமரியாதை, பெற்றுத் தந்த சமத்துவம் இவற்றிலிருந்து நாம் ஒரு நாளும் பின் வாங்கப் போவதில்லை.
(தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது வெளியிட்ட முதல் கொள்கைப் பிரகடனம். – சென்னை – 28.8.2018)
No comments:
Post a Comment