சென்னை, பிப். 18 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப் பெருந்தகை நியமனம் செய் யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் புது டில்லியில் நேற்று (17.2.2024) இரவு வெளியிட்டார்.
இவர் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது சிறீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் அவர் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் தற்போது அவர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்று (17.2.2024) வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கு.செல்வப்பெருந்தகையை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே நியமனம் செய்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதுவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ். அழகிரியின் பணியை கட்சித் தலைமை வெகுவாகப் பாராட்டுகிறது
மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராக எஸ்.ராஜேஷ்குமாரை நியமனம் செய்வதற்கும் அகில இந்திய தலைவர் கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்து செய்தி வருமாறு: “செல்வப்பெருந்தகைக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். கடந்த 2019 முதல் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியை சிறப்பாக வழிநடத்தி வெற்றிகள் பல குவித்த கே.எஸ்.அழகிரியின் எதிர்கால பணிகள் சிறக்கவும், காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ்குமாரின் செயல் பாடுகள் சிறக்கவும் வாழ்த்துகிறேன்” என்று முதல மைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment