டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய தகவல்
தென்மேற்கு பருவ மழை பொய்த்ததால்
ரூ.16.85 கோடி நிவாரணம்
தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை,பிப்.18- தென்மேற்கு பருவ மழை சரிவர பெய்யாததால் பாதிக் கப்பட்ட நாகை, மயிலாடுதுறை, திரு வாரூர்,தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரூ.16.85 கோடி தொகையை அனுமதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
குறுவை சாகுபடி
இதுகுறித்து வருவாய் மற்றும் பேரி டர் மேலாண்மைத்துறை செயலாளர் ராஜாராமன் வெளியிட்ட அரசாணை யில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங் களில் 2023ஆம் ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. மேலும், குறுவை சாகு படிக்காக மேட்டூர் அணையில் இருந்து போதிய அளவு நீர் திறந்து விடப் படவில்லை.
இதனால் 12 ஆயிரத்து 483 ஹெக் டேர் நிலப்பரப்பில் விவசாயம் கடுமை யாக பாதிக்கப்பட்டது. 22ஆயிரத்து 533 விவசாயிகள் பாதிப்படைந்தனர்.
எனவே அவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவதற்காக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.16.85 கோடி தொகையை அனுமதிக்க வேண் டும் என்று தமிழ்நாடு அரசுக்கு வேளாண்மை ஆணையர் கடந்த நவம் பர் மாதம் கடிதம் எழுதியிருந்தார்.
அரசாணை
இந்த முன்மொழிவு, கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி தலைமைச் செயலாளர் தலைமையில் கூடிய கூட்டத்தில் வைக்கப்பட்டது.
அதில் நிவாரணம் வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த நிலையில் வேளாண்மை ஆணையரின் கோரிக்கையை ஏற்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ரூ.16.85 கோடி தொகையை அனுமதித்து அரசு உத்தரவிடுகிறது.
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment