வழக்கைத் திரும்பப்பெற மிரட்டும் ஒன்றிய அரசு கேரள நிதியமைச்சர் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 24, 2024

வழக்கைத் திரும்பப்பெற மிரட்டும் ஒன்றிய அரசு கேரள நிதியமைச்சர் குற்றச்சாட்டு

திருவனந்தபுரம், பிப். 24- கடன் வரம்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததற்காக ஒன்றிய அரசு தங்களை மிரட்டிப் பார்ப்பதாக வும், இது சர்வாதிகாரப் போக்கு என்றும் கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் குற்றம் சாட்டியுள்ளார். கேரள மாநிலத்தின் உற்பத்தியை பொறுத்து அம்மாநிலத் தின் பொதுக்கடன் வாங் கும் வரம்பை 3.5 சதவிகி தத்திலிருந்து 2 சதவிகி தமாக ஒன்றிய அரசு குறைத்தது. இதனை எதிர்த்து கேரள அரசு உச்சநீதி மன்றத்தில் முறையிட்டது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கேரள அரசும் – ஒன்றிய அரசும் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண அறிவுறுத்தி இருந்தது. அதன்படி நடை பெற்ற பேச்சு வார்த்தை யில் இரு அரசுகளுக்கும் இடையே எந்த உடன் பாடும் ஏற்படவில்லை. இதனிடையே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கேரள அரசு தாக்கல் செய்த வழக்கை, திரும்பப் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரி வித் தது.

இதற்கு கேரள அரசு ஒப்புக் கொள்ள வில்லை. இந்நிலையில், கேரள நிதியமைச்சர் கே.என். பாலகோபால், செய்தி யாளர்களைச் சந்தித்தார். அப்போது, “கடன் வரம்பு விவகாரத்தில் உச்ச நீதி மன்றத்தை நாடியதற்காக ஒன்றிய அரசு கேரளத்தை மிரட்டிப் பார்க்கிறது” என்று குற்றம்சாட்டி னார். மேலும் அவர் கூறிய தாவது: “வழக்கை திரும்பப் பெற்றால், 13 ஆயிரம் கோடி ரூபாயை கடன் தொகையாக வாங்க உடனடியாக அனுமதி தருவதாக ஒன்றிய அரசு கூறுகிறது; வழக்கு போட்டா லும், போடா விட்டாலும் வழக்கமாக அனு மதிக்கப்பட வேண் டிய தொகைதான் இது.

அதனைத் தருவதற்கு வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசு மிரட்டுகிறது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வது அரசி யல் சாசன உரிமை. அது எப்படி தவறாக இருக்க முடி யும்?

நீதிமன்றம் செல்வ தற்கு முன்பு, பல வழிக ளில் ஒன்றிய அரசின் கவ னத்திற்கு முறைப்படி கொண்டு செல்லப்பட் டது. ஆனாலும் அனு மதிக்கப்படவில்லை. ஒன்றிய அரசின் அலட்சி யத்தை கண்டித்து டில்லி யில் கேரளம் மட்டுமல்ல, கருநாடகமும் போராட் டம் நடத்தியது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் வழக் குத் தொடுத்திருப்பதாகக் கூறி, பணம் தராமல் ஒன் றிய அரசு மிரட்டுகிறது. மாநிலத்துக்கு உரிய பங்கை ஒதுக்காமல் நிதி ரீதியாக நசுக்கும் ஒன்றிய அரசின் இந்த நடவ டிக்கை சர்வாதிகாரப் போக்காகும்.

அரசியல் சாசனத் திற்கு எதிராக ஒன்றிய அரசு செயல்படுவதால் கடன் தொகையைப் பெறும் வரை கேரள அரசு வழக்கை திரும்பப் பெறாது. நிதியாண்டின் இறுதியான மார்ச் மாதத் தில் பணம் விடுவிக்கப் படாவிட்டால், கேரளம் மிகுந்த சிரமங்களை சந் திக்க வேண்டியிருக்கும்.” இவ்வாறு கே.என். பால கோபால் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment