சென்னை, பிப்.28- பா.ஜனதாவின் 10 ஆண்டு மக்கள் விரோத செயல் கண்டித்து அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்தில் இருந்து காங்கிர சார் வீடு வீடாக துண்டுப் பிரசுரம் வழங்க இருப்பதாக செல்வப் பெருந்தகை அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
தவறான பொருளாதார கொள்கை 15 ஆண்டுகால மக்கள் விரோத பாரதிய ஜனதா ஆட்சி யின் தவறான சமூக பொருளாதாரக் கொள்கை காரணமாக மிகப் பெரிய போழிவை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது.
கடந்த 2023 டிசம்பர் மாத நிலவரப்படி ஒன்றிய பா.ஜனதா அரசின் மொத்த கடன் ரூ.172 லட்சம் கோடி இது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 57 சதவீதம் ஆனால் 1947 முதல் 2014 வரை 67 ஆண்டுகளில் நமது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி பதவி விலகுகிறபோது பெறப்பட்ட மொத்த கடன் ரூ.55 லட்சம் கோடி மட்டும்தான்.
ஆனால், கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் பா.ஜனதா பெற்ற மொத்த கடன் ரூ.117 லட்சம் கோடி. ஒவ்வொரு இந்திய குடி மகன் மீதும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கடன் சுமை ஏற்றப் பட்டுள்ளது.
துண்டுப் பிரசுரம் வினியோகம்
அந்த புத்தகம் தமிழாக்கம் செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும்.
அதன் அடிப்படையில் துண் டுப் பிரசுரம் தயாரிக்கப்பட்டு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மூலம் தமிழ்நாடு முழுவதும் வினி யோகம் செய்து மக்கள் விரோத பா.ஜனதா ஆட்சிக்கு எதிராக
மாபெரும் பிரச்சாரத்தை மார்ச் முதல் வாரத்தில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு முழுவதும் நடத்த இருக்கிறது.
இதன் மூலம் 10ஆண்டு மோடி ஆட்சியின் அவலங்களை காங் கிரஸ் கட்சியினர் கிராமம் கிராம மாக, வீடு வீடாக கையில் காங்கிரஸ் கொடிகளை ஏந்திக்கொண்டு பிர சுரங்களை வினியோகித்து தீவிர மான பிரச்சாரத்தை மேற்கொள் வார்கள்
-இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment