வடக்குத்து, பிப். 7- வடக்குத்து திரா விடர் கழகம் சார்பில் திரா விடர் கழக கொள்கை விளக்க பொதுக்கூட்டமும் பகுத்தறிவு கலை நிகழ்ச்சியும் 5.2.2024 அன்று 6மணி முதல் 9.30 மணி வரை மாவட்ட கழக அமைப் பாளர் மணிவேல் தலைமையில் மாவட்ட தலைவர் தண்ட பாணி பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன் மாநில இளை ஞரணி துணைச் செயலாளர் வேலு முன்னிலையில் நடை பெற்றது.
வடலூர் கழகத் தலைவர் புலவர் ராவணன் தொடக்க உரை ஆற்றினார். கிளைக் கழக தலைவர் தங்க பாஸ்கர் வர வேற்புரை ஆற்றினார்.
மாவட்ட இளைஞர் அணி தலைவர் உதய சங்கர், அமைப் பாளர் டிஜிட்டல் ராமநாதன், ஒன்றிய தலைவர் கனகராஜ், நெய்வேலி ரத்தின சபாபதி, நெய்வேலி மாணிக்கவேல், பாவேந்தர் விரும்பி, மறுவாய் திருநாவுக்கரசு, வடலூர் இரா குணசேகரன், வடலூர் முரு கன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வெங்கடேசன், செயலாளர் அருணாசலம், அமைப்பாளர் தர்மலிங்கம், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பெரியார் செல்வம், மகளிர் அணி தோழர் கள் கலைச்செல்வி, தமிழ்மணி, திராவிட மணி, வனிதா, சும லதா, கவிஞர் தீபக், ராஜ் சுப் பையா, கோபால், நன்மாற பாண்டியன், சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முத்துவேல், நாகலிங்கம், திமுக அரங்கராசன், நூலகர் கண்ணன் ஆகியோர் பங் கேற்று சிறப்பித்தனர்.
சிரிக்க சிந்திக்க வைத்த கலை நிகழ்ச்சி:
புதுக்கோட்டை பூபாளம் குழுவினரின் பகுத்தறிவு கலை நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் சிறப்புரை ஆற் றினார். அவர் தமது உரையில் 2024 நடக்க உள்ள நாடாளு மன்றத் தேர்தலில் மத வெறி ஜாதிய ஒடுக்குமுறை வைதீக பழைமைவாதம் ஆர் எஸ் எஸ் சங்பரிவார் கும்பலின் அரசியல் கட்சியாக இருக்கக்கூடிய பாஜகவை வீழ்த்தி இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் மதவெறி தணிந்து மனிதநேயம் தழைக்க வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் விலைவாசி குறைய வேண்டும் என்றால் மக்கள் நலன் பாது காக்கப்பட வேண்டும் என்றால் மக்கள் ஒற்றுமை நிலை பெற வேண்டுமென்றால் இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் அதற்கான முழு முயற்சியில் வாக்காளர்கள் ஈடுபட வேண் டும் கடந்த மூன்றாம் தேதி கடலூரில் நடந்த திராவிடர் கழக தலைமை செயற்குழுவில் எடுக்கப்பட்ட தேர்தல் பற்றிய முடிவை முழு வீச்சில் செயல் படுத்த வேண்டும் என்று பேசினார். முடிவில் மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் ராம நாதன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment